சாரதாவின் மீது வன்மத்தை கொட்டும் கங்கா, வேதனையில் விஜய் சொன்னது - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, நீங்கள் மலேசியெல்லாம் ஒன்னும் போக வேண்டாம். நல்ல தகப்பனாக இருப்பதற்கு முயற்சி செய்கிறீர்களா? என்று வழக்கம் போல குமரனை ஏளனமாக பேசி இருந்தார். உடனே கோபப்பட்ட குமரன், நான் நல்ல கணவன் இல்லை என்று சொல்லிவிட்டாய். என்னுடைய குழந்தைக்கு தேவையானதை எல்லாம் நான் செய்வேன். நான் கண்டிப்பாக போவேன் என்று சொல்லி விட்டார். மறுநாள் குமரன் மலேசியா கிளம்புவதற்கு தயாராக இருந்தார். ஆனால், கங்கா கோபத்தில் இருந்தார்.
வீட்டில் உள்ள எல்லோருமே குமரனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்கள். அதற்குப்பின் குமரன் தன் பேச்சை கேட்காமல் போனதை நினைத்து கங்கா வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு ஸ்கேன் செய்ய போவதால் கங்கா ஆர்வமாகவும் சந்தோஷமாக இருந்தார். விஜய், என்ன நடக்குமோ? குழந்தைக்கு பிரச்சனை இருக்குமோ? என்று கவலையில் இருந்தார். பின் ஒரு வழியாக கங்காவை சமாதானம் செய்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போனார்கள்.
மகாநதி
கங்கா-காவிரி இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் பின் ஒருவராக ஸ்கேன் செய்தார்கள். பிறகு டாக்டர், கங்கா- காவேரி இருவரின் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள். இதனால் இருவருமே சந்தோஷப்பட்டார்கள். விஜய், சாரதாவும் காவிரியின் குழந்தை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். அப்போது விஜய், உனக்கு அம்மை நோய் வந்தபோது குழந்தைக்கு பிரச்சனை என்று சொன்னார்கள். அதனால் தான் பயந்துவிட்டோம் என்றார். இதனால் சாரதா, நேர்த்திக்கடன் இருக்கு. கோயிலுக்கு போகலாம் என்றார். இதை எல்லாம் பார்த்து கங்காவிற்கு பயங்கர கோபம் வந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரிக்காக சாரதா செய்த வேண்டுதலால் கோபப்படுகிறார் கங்கா. விஜய்- காவிரி இருவருமே ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்கள். பின் வீட்டிற்கு வந்த சாரதாவிற்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. உடனே கங்கா, இதெல்லாம் தேவையா? அவள் குழந்தைக்கு என்ன பிரச்சனை, நல்லாதானே இருக்கு என்றெல்லாம் மோசமாக பேசுகிறார். உடனே காவிரி, உனக்கு ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கணுமா, என்னதான் பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு கங்கா, காவிரி- சாரதாவை திட்டி விட்டு செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் யமுனாவிற்கு போன் செய்த கங்கா நடந்ததை எல்லாம் சொல்கிறார். யமுனாவும் இன்னும் கொஞ்சம் காவிரியை பற்றி ஏத்தி விடுகிறார். அதற்குப்பின் விஜய் வீட்டிற்கு வருகிறார். அப்போது விஜய், நிவின் ரொம்ப பாவம். யமுனாவை தெரியாமல் நிவினுக்கு கல்யாணம் செய்து விட்டோம். அவர் ரொம்பவே எமோஷனலாக பேசி புலம்புகிறார் என்றெல்லாம் சொல்கிறார். காவிரியுமே வருத்தப்படுகிறார். பின் விஜய், காவிரிக்கு கால் அமுத்திவிட்டு பேசி கொண்டு இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது