வளைகாப்பு விழாவில் குமரனை அசிங்கப்படுத்தும் கங்கா, அதிர்ச்சியில் குடும்பம் - மகாநதி

By subhashini · 7/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் மேக்கப் மற்ற விஷயங்கள் எல்லாம் நீ செய்ததாகவே சொல். நான் செய்தேன் என்று நினைத்தால் அவள் நன்றாக இல்லை என்று கோபப்படுவாள் என்று சொன்னார். அதற்குப்பின் காவிரி-விஜய் இருவருமே பைக்கில் ரைடு போனார்கள். காவிரிக்கு குமரன் செய்யும் வேலை பற்றி தெரியாது. விஜய், உண்மை எதுவும் சொல்ல விலை. பின் இருவரும் ரொம்ப ஜாலியாக பேசிக்கொண்டு போனார்கள்.

நேற்று எபிசோட்டில் விஜய், காவிரியை அழைத்துக் கொண்டு குமரன் கடைக்கு தான் போனார். குமரன் கஷ்டப்பட்டு வேலை செய்வதை பார்த்து காவேரி வருத்தப்பட்டார். கங்காவின் வளைகாப்பிற்காக தான் இது எல்லாம் குமரன் செய்கிறார் என்பதை தெரிந்து கொண்டு காவேரி பாராட்டினார். உடனே குமரன், இந்த உண்மையை கங்காவிடம் சொல்ல வேண்டாம் என்றார். மறுநாள் கங்காவின் வளைகாப்பிற்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. குமரன் வரவில்லை என்று கங்கா பயங்கர கோபத்தில் இருந்தார்.

மகாநதி

காவிரியும் உண்மையை சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளித்தார். இன்னொரு பக்கம் குமரன் தன்னுடைய ஆர்டரை முக்கால்வாசி முடித்து விட்டார். பின் அந்த ஆர்டர் கொடுத்த நபர்களிடம் முழு பணத்தையும் குமரன் கேட்டார். ஆனால், அவர்கள் தர முடியாது என்று சொல்வதால் குமரனுக்கும் ஆர்டர் கொடுத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இன்னொரு பக்கம் குமரன் வராததால் வீட்டில் எல்லோருமே கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். விஜய்யுமே குமரனுக்கு போன் செய்து விசாரித்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமரன் ஒரு வழியாக வளைகாப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுகிறார். குமரன் பார்த்தவுடன் கங்கா பயங்கரமாக கோபப்படுகிறார். பின் தயாராகி மேடைக்கு வந்த குமரனை பார்த்து கங்கா கோபப்படுகிறார். உடனே கங்கா, மாலையை கீழே தூக்கி போட்டு பயங்கரமாக கத்தி சண்டை போடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே கங்காவை அமைதியாக இருக்க சொல்கிறார்கள். பின் குமரன், உனக்கு ஆசைப்பட்ட ஒட்டியானம் வாங்க தான் நான் வீட்டுக்கு வராமல் வேலை செய்தேன்.

சீரியல் ட்ராக்:

என்னை மன்னித்து விடு கங்கா. என்னால் முடிந்த வரை செய்கிறேன். ஆனால், உன்னுடைய ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்று ரொம்ப எமோஷனாக பேசுகிறார். குமரன் அம்மா, கங்காவை திட்டுகிறார். குமரன் பேசியதை கேட்டு கங்கா அமைதியாகி விடுகிறார். பின் கங்காவிற்கு ஒட்டியாணம் போட்டு விட்டு அழகு பார்க்கிறார் குமரன். பின் வளைகாப்பு தொடங்குகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full