சாரதா செய்த வேலையால் காவிரி-கங்கா இடையே ஏற்படும் விரிசல், அடுத்து என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரியின் அம்மா, விஜய்க்கு பார்த்து பார்த்து சாப்பாடுகளை செய்தார். இன்னொரு பக்கம் நிவின் வீட்டிற்கு சென்ற குமரன், காவிரி- விஜய் சேர்ந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். இதைக் கேட்டு யமுனாவுக்கு ஷாக் ஆனது. அதற்குப்பின் காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்த யமுனா வீட்டிற்கு வந்தார். அப்போது காவிரியை கட்டி பிடித்து யமுனா சந்தோஷப்பட்டார். ஆனால், காவிரி அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருக்குமே தடபுடலாக விருந்துகளை காவிரியின் அம்மா பரிமாறினார்.
அதற்குப்பின் மொட்டை மாடியில் மூன்று ஜோடிகள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது
யமுனா, எல்லாத்துக்குமே சாரி. நான் தான் கேவலமானவள் என்றெல்லாம் சொன்னார். யமுனா திரிந்து விட்டால் என்று எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். நிவின், அவள் திருந்த மாட்டாள் என்று உள்ளுக்குள் நினைக்கிறார். அப்போது விஜய், காவிரி கர்ப்பமான விஷயத்தை முதலில் நிவினுக்கு தான் தெரியும் என்று சொன்னவுடன் வழக்கம் போல் மீண்டும் யமுனா சந்தேகப்பட்டார்.
மகாநதி:
விஜய், குமரன், நிவின் மூன்று பேருமே சரக்கு அடித்துக் கொண்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சாரதா, காவிரியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டு பார்த்து பார்த்து செய்தார். இதையெல்லாம் பார்த்து கங்காவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அதோடு தூங்கும் ரூமை கூட இருவருக்கும் வித்தியாசமாக பார்த்து கொடுத்தார். அதற்குப்பின் நிவின் வீட்டுக்கு கிளம்பி விட்டார். குமரன், விஜய் இருவருமே குடித்துவிட்டு கொஞ்சம் ஜாலியாக அட்ராசிட்டி செய்து கொண்டிருந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது விஜய், எங்களுக்காக ஸ்பெஷல் ஆக தயார் செய்ய வேண்டாம். நீங்கள் எப்போதும் போல இருங்கள். எங்களுக்காக யாரும் உங்களின் ப்ரைவேசி விட வேண்டாம் என்று சொல்லி விஜய் குடியிருந்த போர்சனுக்கே இருவரும் சொன்னார்கள். இன்னொரு பக்கம் நிவின் வீட்டிற்கு வந்த உடனே வழக்கம்போல சண்டை வாங்க யமுனா காத்துக் கொண்டிருந்தார். அப்போது யமுனா, காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை உங்களுக்கு எப்படி முதலில் தெரியும். நீங்கள் ஏன் குமரன் மாமாவிடம் சொல்லவில்லை என்றெல்லாம் கேட்டார். அதற்கு நிவின், என்னைக்கும் நீ திருந்த மாட்ட. உன்னிடம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டி விட்டு சென்றார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் காவேரி- விஜய் இருவருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு காவேரி- விஜய் இருவருமே சேர்ந்திருக்கிறார்கள். மறுநாள் காலையில் காவிரி வீட்டில் விஜயை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார்கள். அந்த சமயம் பார்த்து விஜயினுடைய தாத்தா, பாட்டி வீட்டிற்கு வருகிறார்கள். இருவருமே காவிரியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்கிறார்கள். உடனே சாரதாவும் சம்மதிக்கிறார். பின் விஜய், தன் தாத்தா பாட்டியை அழைத்து சென்று நான் இங்கே இருக்கிறேன். நான் அங்கு வரவில்லை என்று சொல்கிறார். இதை கேட்டு தாத்தா- பாட்டி இருவரும் ஷாக் ஆகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=eQRzPlza1Ls&t=1s
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சாரதா, காவிரி கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததிலிருந்தே பார்த்து பார்த்து கவனிக்கிறார். இதையெல்லாம் பார்த்து கங்காவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அதோடு விஜய், காவிரியின் வீட்டிற்க்கே வந்ததால் விஜயை இன்னும் அதிகமாக சாரதா கவனிக்கிறார். குமரனை பெரிதாக கவனிக்கவில்லை. அதோடு கடைகளுக்கு செல்வது, வீட்டு வேலை எல்லாம் குமரனை சாரதா செய்ய சொல்கிறார். இது எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் அதிகமாகிறது.