வளைகாப்பில் கோபத்தில் அசிங்கப்படுத்தும் கங்கா, குமரன் சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 5/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் குமரன், கங்காவின் வளைகாப்பை சிறப்பாக நடத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அப்போது அவருக்கு புது ஆர்டர் கிடைத்தது. ஆனால், அதை நாலு நாட்களில் முடிக்கணும் என்பது கஷ்டமான விஷயம் தான். இருந்தாலுமே குமரன் அந்த ஆர்டரை எடுத்துக் கொண்டார். பின் வீட்டிற்கு வந்த குமரன், புது ஆர்டர் ஒன்று கிடைத்திருக்கிறது. நான் கடைக்கு போகணும் என்றார். ஆனால், கங்கா வழக்கம் போல் குமரனை திட்டிக் கொண்டுதான் இருந்தார்.

குமரன் கடையில் தனியாக வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிவின்- விஜய் இருவருமே அவருக்கு சப்போர்ட்டாக வந்துவிட்டார்கள். பின் மூவரும் கலகலப்பாக பேசி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் நிவின்- விஜய் இருவரும் தூங்கி விட்டார்கள். இருந்தாலும் விடாமல் குமரன் வேலை செய்து கொண்டிருந்தார். அதோட வேலைக்கு சில ஆட்களையும் குமரன் வைத்து செய்தார். பின் தூக்கத்தில் விஜய், காவேரியின் பெயரை சொல்லி கொண்டிருந்தார். இதையெல்லாம் நிவின்- குமரன் இருவருமே கிண்டல் செய்தார்கள்.

மகாநதி:

குமரன் இரவு பகல் என்று பார்க்காமல் தன்னுடைய ஆர்டரை முடித்து கங்காவின் வளைகாப்பை சிறப்பாக நடத்த வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருந்தார். விஜய்-நிவின் இருவரும் குமரனுக்கு சப்போர்ட் செய்தார்கள். கங்கா, உண்மை தெரியாமல் குமரனை திட்டிக் கொண்டிருந்தார். வீட்டிற்கு வந்த குமரனும் எதுவும் சொல்லாமல் வேலை இருக்கிறது என்றார். அதற்குப்பின் காவிரியிடம் குமரன், கங்காவின் வளைகாப்பு சிறப்பாக நடத்தணும்.

சீரியல் ட்ராக்:

மேக்கப் மற்ற விஷயங்கள் எல்லாம் நீ செய்ததாகவே சொல். நான் செய்தேன் என்று நினைத்தால் அவள் நன்றாக இல்லை என்று கோபப்படுவாள் என்று சொன்னார். அதற்குப்பின் காவிரி-விஜய் இருவருமே பைக்கில் ரைடு போனார்கள். காவிரிக்கு குமரன் செய்யும் வேலை பற்றி தெரியாது. விஜய், உண்மை எதுவும் சொல்ல விலை. பின் இருவரும் ரொம்ப ஜாலியாக பேசிக்கொண்டு போனார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கங்கா வளைகாப்பிற்காக தயாராக இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=ZhsLfEzIrYw

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கங்கா வளைகாப்பிற்காக தயாராக இருக்கிறார். குமரன் வரவில்லை என்று கங்கா பயங்கரமாக கோபப்படுகிறார். பின் குமரன் வந்தவுடன் கோபத்தில் கங்கா, இவரை நம்பி இந்த குழந்தை பெற்றுக் கொள்வதை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது என்றெல்லாம் குமரனை திட்டி பேசுகிறார். அப்போது குமரன், கங்காவிற்காக வாங்கி வந்த ஒட்டியானத்தை காண்பித்து, இதற்காக தான் நான் வீட்டிற்கு வராமல் வேலை செய்தேன். உனக்கு நான் எவ்வளவு செய்தாலும் பத்தவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று வேதனையில் பேசுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full