கோபத்தில் குமரனை வெளுத்து வாங்கும் கங்கா, யமுனாவிற்கு நிவின் வைத்த ஆப்பு - மகாநதி

By subhashini · 11/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் யமுனா, காவிரியை பற்றி வழக்கம்போல திட்டிக் கொண்டிருந்தார். பதிலுக்கு கங்காவுமே விஜய், காவிரியை பற்றி புலம்பி கொண்டிருந்தார். கங்கா யமுனா இருவருமே சேர்ந்து காவிரியின் மீது பொறாமை பட்டு வன்மத்தை கொட்டிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் விஜய் வேலைக்காக பார்த்துக் கொண்டிருந்தார். காவிரி எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்கவில்லை. சாரதாவும் பார்த்து பார்த்து விஜய், காவிரியை கவனித்துக் கொண்டார். பின் யமுனா சுற்றி சுற்றி காவிரியை பற்றி தான் திட்டிக்கொண்டே இருந்தார்.

நேற்று எபிசோட்டில் விஜய்க்கு பார்த்து பார்த்து சாரதா சமைத்து வைத்திருந்தார். பின் குமரன்- விஜய் இருவருமே சேர்ந்து சாப்பிட்டார்கள். அதற்கு பின் வீட்டில் கங்கா, சாரதா, பாட்டி மூவருமே துணி மடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது குமரனை கடைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் என்று சாரதா சொன்னார். இதை கேட்டவுடன் கோவப்பட்ட கங்கா, எப்ப பார்த்தாலும் அவரே வேலை செய்யணுமா? விஜய் அப்படின்னா ஒஸ்தியான மாப்பிள்ளையா? அவரே அடுத்த வேலை காசுக்கு நம்மகிட்ட வந்து நிக்கணும் என்றெல்லாம் ரொம்ப தரகுறைவாக விஜய் பற்றி பேசி இருந்தார். இதைக் கேட்டு கோவப்பட்ட காவிரி, கங்காவிடம் சண்டைக்கு போனார்.

மகாநதி:

கடைசியில் காவிரி, விஜய் எனக்காக எவ்வளவோ செய்திருந்தார். நீ ரெண்டு வேளை சாப்பாடு போட்டு சொல்லி காமிக்க தேவையில்லை. அவரை பார்த்துக்க நான் இருக்கிறேன் என்று திட்டி விட்டு சொன்னார்.
ஆனால், இதெல்லாம் விஜய்க்கு தெரியவில்லை. அதற்கு பின் விஜய், சாரதா- காவிரியை அழைத்துக் கொண்டு பார்க்கிங்க்கு வந்து இருந்தார். மூவருமே ஜாலியாக பேசிக்கொண்டு வாக்கிங் போனார்கள். அப்போது சாரதா, பசுபதி செய்த வேலையை பற்றி ரொம்ப விமோசனாக பேசி அழுதார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய் தன்னுடைய வேலைக்காக ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால், சரியான பதில் கிடைக்காததால் குழப்பத்தில் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்த காவிரி ரொம்பவே வருத்தப்படுகிறார். அதோடு காவேரி, விஜயின் பர்சில் பணம் வைக்கிறார். அதை அதை பார்த்த விஜய், என்னிடம் பணம் இருக்கிறது. நீ எதைப் பற்றியும் யோசிக்காதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் நிவின் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். பின் நிவின் அம்மாவிடம் யமுனா பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

நிவின் அம்மா ஒவ்வொன்றுக்குமே பதிலடி கொடுக்கிறார். யமுனாவால் எதுவுமே பேசவில்லை. இன்னொரு பக்கம் குமரன் சந்தோஷமாக பாட்டு கேட்டுக் கொண்டு தன்னுடைய வேலையை செய்கிறார். ஆனால், விஜயால் குமரனை தன்னுடைய அம்மா மரியாதையாக நடத்தவில்லை என்று நினைத்துக் கொண்டு கங்கா கோபப்பட்டு குமரனிடமும் சண்டை வாங்கினார். அதற்கு குமரன், விஜய் புதிதாக வந்தவர். அதனால் தான் அத்தை கவனிக்கிறார். நான் சின்ன வயதிலிருந்து அவர்களிடம் வளர்ந்தவன். நீ அதை எல்லாம் யோசிக்காதே என்று சொல்கிறார். இருந்தாலுமே கங்கா கேட்கவில்லை, குமரனை தான் திட்டிக் கொண்டு இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full