குமரன் சொன்ன விஷயத்தால் அதிர்ச்சியில் உறைந்த கங்கா, முத்துமலர் குடும்பம் நிலை என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, ஒரு தூசி கூட என்னால் தர முடியாது. ஒழுங்கு மரியாதையாக கிளம்ப சொல்லுங்கள் என்றார். அதற்கு முத்துமலர், எங்களுடைய சொத்து பங்கு வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றார்கள். உடனே போலீஸ், நீங்கள் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு முத்து மலர், கோர்ட்டில் தீர்ப்பு வர தாமதமாகும். இங்கேயே பேசி முடிவெடுங்கள் என்றார். சாரதா ஒத்துக்கொள்ளவில்லை. பங்கை வாங்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என்று முத்துமலர் குடும்பம் அங்கேயே உட்காருகிறது.
பின் வீட்டுக்குள் சாரதா ரொம்பவே உடைந்து போய் பேசிக் கொண்டிருந்தார். தன் கணவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்று புலம்பி கொண்டிருந்தார். சாரதா, கங்கா இருவருமே சொத்தை காவிரி பெயரில் மாற்றிவிடலாம். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஐடியா கொடுத்தார்கள். அதற்கு விஜய், பிரச்சனை வருமே, என்ன செய்வது என்றார். அதற்கு சாரதா, காவிரி பெயரில் இருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. அதற்கான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார். விஜய், நாளை தான் ரிஜிஸ்டர் பண்ண முடியும். இன்னிக்கு முடியாது அமைதியாக இருங்கள் என்று சமாதானம் சொன்னார்.
மகாநதி:
சாரதா, உன் மகன் யோகியமானவனா? இங்கு ஒரு குடும்பம், அங்கு ஒரு குடும்பம் வைத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கிறான். இவ்வளவு கேடுகெட்டவனா? என்றெல்லாம் சந்தானத்தை திட்டிக் கொண்டிருந்தார். பின் தன்னுடைய கணவர் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து சாரதா உடைந்து போயிருந்தார். அவருடைய மகள்கள் எல்லோருமே ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலுமே சாரதாவால் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப்பின் காவிரி, தன்னுடைய அப்பா தனக்காக செய்ததெல்லாம் நினைத்துப்பட்டு ரொம்ப எமோஷனலாக அழுது விஜய்யிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமரன், கங்காவிற்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதில், மாமாவிற்கு இன்னொரு குடும்பம் இருக்கும் விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும். மாமா என்னிடம் சத்தியம் வாங்கியதால் தான் சொல்ல முடியவில்லை. என்னை மன்னித்துவிடு கங்கா. கோபப்படாதே, நிவின் போட்டோ அனுப்பினார். அவர்கள் தான் மாமாவுடைய இன்னொரு குடும்பம் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு கங்கா ரொம்பவே உடைந்து போய் அழுகிறார். இன்னொரு பக்கம் நிவின், விஜய் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நிவின், குமரனுக்கு இன்னொரு குடும்பம் இருக்கும் விஷயம் தெரியும் என்று சொன்னதை கேட்டு விஜய் ஷாக் ஆகினார்.
சீரியல் ட்ராக்:
அப்போது முத்து மலர் குடும்பம் அங்கேயே தங்குவதற்கு வருகிறது. விஜய், வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், முத்துமலர் குடும்பம் கேட்கவில்லை. எங்கள் உரிமையை விட்டு தர முடியாது என்று சொல்கிறார்கள். இதை கேட்ட சாரதா, கோபப்பட்டு முத்து மலரிடம் சண்டை போடுகிறார். பின் எல்லோரையும் வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிக்கொள்கிறார். முத்து மலர், நம்ம பிரச்சனை செய்ய வேண்டாம். ஆனால், நம்முடைய உரிமையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார். விஜய், அவர்கள் குளிரில் வெளியே கஷ்டப்படுகிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்றெல்லாம் சொல்கிறார். சாரதா கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.