குழந்தையை நினைத்து புலம்பும் கங்கா, வேலை தேடி அலையும் விஜய் - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, விஜயின் காலில் விழுந்து எமோஷனலாக நன்றி சொல்லி அழுதார். பின் விஜய், உங்களுக்கு எந்த கஷ்டமும், நஷ்டமும் வரவிடமாட்டேன். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயை ஹீரோ போல பேசினார்கள். இது எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் தான் வந்தது. இன்னொரு பக்கம் நிவின் செய்த வேலையை தெரிந்த அவருடைய அம்மா திட்டி கொண்டிருந்தார். ஆனால், நிவின் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
நேற்று எபிசோட்டில் விஜய்- காவிரி இருவருமே பசுபதி இடமிருந்து பத்திரத்தை மீட்டதை பற்றி ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் வீட்டில் எல்லோருமே ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, ஸ்கேன் செய்ய ஹாஸ்பிடல் போகணும் என்றார். உடனே குமரன், கங்காவிற்கும் செய்யணும் என்றார். காவிரி, ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம் என்று சொன்னார். ஆனால், கங்கா வேண்டாம் என்று தவிர்த்தார்.
மகாநதி:
வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போயிட்டு வாருங்கள் என்று சொல்வதால் கங்காவும் அமைதியாக ஒத்துக் கொண்டார். ஆனால் விஜய், காவிரியின் ஸ்கேன் நினைத்து வருத்தப்பட்டார். இதை அறிந்த காவிரி அம்மா,என்ன ஆச்சு என்று விசாரித்தார். அப்போது விஜய், அம்மை வந்திருந்ததால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். அதற்கு சாரதா ஆறுதல் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய் இன்டர்வியூக்காக ஒரு கம்பெனிக்கு கிளம்ப தயாராக இருக்கிறார். அப்போது காவிரி அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்புகிறார். பின் சாரதா, விஜய் வெளியே கிளம்புவதை பற்றி கேட்கிறார். அதற்கு காவிரி, நான் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் விஜய் வேலைக்கு செல்ல நினைக்கிறார். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று புலம்புகிறார். இன்னொரு பக்கம் கங்கா, குழந்தை பிறப்பது தொடர்பான வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
நெருக்கமான உறவில் திருமணம் செய்து கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று வீடியோவில் சொல்கிறார்கள். இதை கேட்டு கங்கா ரொம்பவே எமோஷனல் ஆகிறார். இதைப் பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொல்லி கங்கா புலம்புகிறார். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் கங்காவிற்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆனால் கங்காவின் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. குமரனும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கங்கா குமரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.