குமரனை நினைத்து கவலையில் இருக்கும் கங்கா, கோபத்தில் சாரதா - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, குமரனும் அந்த தவறு செய்திருப்பாரோ என்று கவலையாக இருக்கிறது என்றார். அதற்கு விஜய், நீங்கள் என் மீது கூட சந்தேகப்படலாம். ஆனால், அவர் மீது சந்தேகப்பட தேவையில்லை. உங்களுக்கு ஏதாவது சந்தேகமா இருந்தால் அவரிடமே நேரடியாக போன் செய்து கேட்க வேண்டியதானே என்றார். விஜய் பேசியதற்கு பிறகு கங்கா கொஞ்சம் தெளிவாக இருந்தார் அதற்குப்பின் விஜய், காவிரி இருவரும் வாக்கிங் போனார்கள். அப்போது தன்னுடைய குடும்பத்தை பற்றியும் குழந்தையைப் பற்றியும் காவிரி பேசிக் கொண்டிருந்தார்.
சிந்து, பசி தாங்க முடியாமல் ஒரு மரத்தில் நின்று கொய்யா பறித்துக் கொண்டிருந்தார். உடனே அந்த பக்கம் விஜய், காவிரியை பார்த்தவுடன் சிந்து ஒளிந்து கொண்டார். இதை கவனித்த விஜய், சிந்துவிற்கு கொய்யா பறித்து கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இன்னொரு பக்கம் முத்துமலர், தன்னுடைய பிள்ளைகள் பசியில் இருப்பதால் டீ போட்டார். உடனே அங்கு வந்த சாரதா, இந்த மாதிரி திருட்டுத்தனமாக சமைத்து சாப்பிடுவதற்கு பிச்சை எடுக்கலாம் என்று அவமானப்படுத்தினார். வேதனையில் முத்து மலர், நான் மட்டும் இருந்தால் பிச்சை எடுத்து இருப்பேன். என்னை நம்பி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். என்ன செய்வது? என்று அழுது கொண்டு அங்கிருந்து வந்தார்.
மகாநதி:
அப்போது கங்கா தவறி விழப்போவதால் முத்துமலர் பிடித்து விட்டு கவனமாக இரு என்று சொல்லிவிட்டு சென்றார். பின் சாரதா, பசியோடு வந்தாள். நான் திட்டி அனுப்பிவிட்டேன் என்று வருத்தப்பட்டார். சாரதா அவமானப்படுத்தியதை தன்னுடைய பிள்ளைகளிடம் சொல்லி முத்து மலர் ரொம்ப எமோஷனலாக அழுது கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவேரி,பாட்டி, சித்தி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை அசைவதால் எல்லோருமே காவிரியின் வயிற்றில் கை வைத்து சந்தோஷப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரியின் வயிற்றில் கை வைத்ததில் குழந்தை அசைவதால் தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். காவிரியை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் நர்மதா பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது பால் தவறி மேலே விழுவதால் கிருஷ்ணா எடுத்து தர உதவி செய்கிறார். பின் நர்மதா, கிருஷ்ணா இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த சாரதாவின் மாமியார், சந்தானத்திற்கு ஆண் வாரிசு இல்லை என்று கவலைப்பட்டேன்.
சீரியல் ட்ராக்:
நீ இருக்கும் விஷயம் தெரிந்த உடன் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. முன்னாடியே தெரிந்திருந்தால் எல்லோரும் சேர்ந்து இருக்கலாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட நர்மதா, சாரதாவிடம் சொல்கிறார். இதனால் கொந்தளித்த சாரதா, தன்னுடைய மாமியாரை திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் கங்கா, குமரன் அனுப்பிய பழைய மெசேஜை எல்லாம் எடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறார். பின் குமரனுக்கு போன் செய்து பேச முயற்சிக்கிறார். ஆனால், அவர் போன் எடுக்கவில்லை. பின் தன் அம்மாவிடம் குமரனை பற்றி கேட்டு விசாரிக்கிறார். அதற்கு சாரதா, நான் பேசி ரொம்ப நாளாச்சு. நீ எதற்காக மாசக்கணக்கில் பேசாமல் இருந்தாய். ஒழுங்கு மரியாதையாக மாப்பிள்ளை இடம் பேசி என்று அறிவுரை எல்லாம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.