வீட்டை விற்க கங்கா-யமுனா செய்யும் சதி வேலை, காவிரி எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 23/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ஹாஸ்பிடலில் இருந்து வந்த பாட்டி நன்றாக பேசிக் கொண்டிருந்தார். விஜய், பாட்டி, தாத்தா எல்லோருமே கலகலப்பாக பேசி இருந்தார்கள். அதற்குப்பின் பாட்டியை தூங்க வைத்துவிட்டு விஜய்- காவிரி இருவருமே தங்களுடைய வீட்டிற்கு வந்துவிட்டார்கள். பின் காவிரி வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கங்கா, கொடைக்கானல் வீட்டை விற்பனைக்கு கேட்பதாக தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். உடனே கோபப்பட்ட காவிரி, எதற்காக விற்கணும்? என்றார். காவேரி, அப்பா கஷ்டப்பட்டு கட்டின வீடு.

அதை விற்க ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றார். அதற்கு கங்கா, இங்கே இருந்து கொண்டு அந்த வீட்டையெல்லாம் பார்த்துக் கொள்ள முடியாது. வீட்டை விற்பது தான் சரி. உனக்கு ஊருக்கு போகணும் என்றால் ரூம் போட்டு கொடைக்கானலில் தங்கி விட்டு வா என்றெல்லாம் சொன்னார். இருந்தாலுமே கேட்காமல் காவிரி ரொம்ப எமோஷனலாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். சாரதாவுமே என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக இருந்தார். பின் விஜய்-காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, பாட்டியின் உடம்பு சரியில்லாமல் இருப்பதால் வீட்டிற்கு சென்று விடலாம் என்றெல்லாம் நாசுக்காக சொல்லி பார்த்தார்.

மகாநதி:

விஜய் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிவின் அம்மா, எதற்காக இப்படி கஷ்டப்படுகிறாய். உனக்கு பணத்தை நான் தருகிறேன். நீ யமுனாவிற்கு விவாகரத்து கொடுத்துவிடு. இந்த சொத்து முழுவதும் நீதான் அனுபவிக்கணும். உனக்கு பிடித்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என்றெல்லாம் சொன்னார். இதைக்கேட்டு யமுனாவிற்கு பயங்கர கோபம் தான் வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எபிசோட்டில் நிவின், யமுனா நான் அவளுக்கு கிடைப்பேனா? இல்லையா? என்ற பதட்டத்தில் தான் இருக்கிறார். யமுனாவிற்கு என்னை ஏதோ ஒரு விதத்தில் பிடித்திருக்கிறது. ஆனால், என்னால் தான் அவளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவளை விவாகரத்து செய்யணும் என்று எனக்கு எண்ணம் வந்ததில்லை. தேவையில்லாமல் இதைப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட யமுனா ரொம்பவே எமோஷனலாக அழுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் யமுனா, கொடைக்கானல் வீட்டை விற்கும் விஷயமாக பேசுவதற்கு தன்னுடைய அம்மா வீட்டிற்கு வருகிறார். அப்போது கங்கா- யமுனா இருவருமே சேர்ந்து தன்னுடைய அம்மாவிடம் வீட்டை விற்பதை பற்றி பேசுகிறார்கள். அப்போது கங்கா, காவிரிக்கு பணக்கார வாழ்க்கை கிடைத்துவிட்டது. நாங்கள் இருவரும் தான் கஷ்டப்படுகிறோம். வீட்டை விற்று எங்களுக்கான செட்டில்மெண்ட் கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் சொல்வதால் சாரதாவுமே மனம் மாறுகிறார். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த காவிரி, நான் விஜயுடன் சேர்ந்து அவர்கள் வீட்டிற்கு போகலாம் என்று இருக்கிறேன் என்று சொல்கிறேன். இதை கேட்டு சாரதாவும் சம்மதம் சொல்கிறார். தயவு செய்து வெளியே போ என்று சொல்லாமல் கங்கா சொல்லுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full