பாட்டியின் நிலைமைக்காக விஜய் தாத்தா கேட்ட சத்யம், காவிரி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின், புதிதாக தான் தொடங்க இருக்கும் தொழிலை பற்றி பேசி இருந்தார். பின் நிவின் அம்மா, ரெண்டு பேருமே சேர்ந்து பேசி கூட நான் பார்த்ததில்லை. உனக்கு இந்த கல்யாணத்திலும் விருப்பமில்லை, அவளையும் பிடிக்கவில்லை. எதற்காக இப்படி கஷ்டப்பட்டு வாழனும், யமுனாவிற்கு விவாகரத்துக் கொடு என்றார். இதை கேட்டு யமுனாவிற்கு பயங்கர கடுப்பானது. நிவின் அம்மா, யமுனாவிற்கு பணத்தை கொடுத்து இங்கிருந்து அனுப்பிவிடலாம்.
அதற்கு பின் உன் தொழிலை பற்றி யோசி. நீ சந்தோஷமாக இரு என்றார். ஆனால், நிவின் சிரித்துக்கொண்டே எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். இதையெல்லாம் பார்த்து யமுனாவிற்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் காவிரி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது விஜய், சத்தம் போடாமல் உள்ளே வந்தார். இருந்தாலுமே காவிரி எழுந்து பாட்டிக்கு என்ன ஆனது? எப்படி இருக்கிறார்கள்? என்று விசாரித்தார். அப்போது விஜய், பாட்டி உடல்நிலை மோசமாக இருக்கிறது.
மகாநதி:
அவர் என்னைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் எமோஷனலாக பேசினார். மறுநாள் காலையில் பாட்டியை பார்க்க விஜய்- காவிரி இருவருமே போனார்கள். அப்போது தாத்தா, இரவில் இருந்தே பாட்டி பயந்து புலம்புகிறார். என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றார். பின் பாட்டியை பார்த்த விஜய், என்னானது பாட்டி? தைரியமாக இருங்கள் என்றார். அதற்கு பாட்டி, நீ என்னுடனே இரு. எங்கும் போகாதே என்றார். காவிரி, பாட்டியிடம் விசாரித்தார். உடனே பாட்டி, காவிரியை தள்ளிவிட்டு நீதானே விஜயை என்னிடமிருந்து பிரித்துப் போனாய்? நீ இங்கிருந்து போ என்றெல்லாம் திட்டினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயின் பாட்டி வழக்கம் போல் காவிரியை தான் திட்டிக் கொண்டிருக்கிறார். விஜய் ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே பாட்டி கேட்கவில்லை. அதற்குப்பின் பாட்டியை அழைத்துக் கொண்டு விஜய் ஹாஸ்பிட்டலுக்கு செல்கிறார். பின் தாத்தா- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தாத்தா, நீ விஜயை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடு. அப்போது தான் பாட்டி நன்றாக இருப்பார். எனக்கு சத்தியம் செய் என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு காவிரி, விஜய்யை உங்களிடம் சேர்த்து வைப்பேன் என்று சத்தியம் செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் ஹாஸ்பிடலில் இருந்த பாட்டி நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார். விஜய், பாட்டி, தாத்தா எல்லோருமே கலகலப்பாக பேசுகிறார்கள். அதற்குப்பின் பாட்டியை தூங்க வைத்துவிட்டு விஜய்- காவிரி இருவருமே தங்களுடைய வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். பின் காவிரி வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கங்கா, கொடைக்கானல் வீட்டை விற்பனைக்கு கேட்பதாக தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார். உடனே கோபப்பட்ட காவிரி, எதற்காக விற்கணும்? என்று கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.