காவிரிக்காக பாட்டி செய்த அமர்க்களமான ஏற்பாடு, சந்தோஷத்தில் விஜய் - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் துணிகளை எல்லாம் பேக் செய்துவிட்டு விஜய்- காவிரி இருவருமே வீட்டை விட்டு கிளம்ப தயாராக இருந்தார்கள். சாரதா, பாட்டி எல்லோருமே எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். மனம் இல்லாமல் அங்கிருந்து விஜய்-காவேரி கிளம்பினார்கள். இதையெல்லாம் பார்த்து கங்காவிற்கு பயங்கர கடுப்பானது. ஒரு வழியாக காவிரி- விஜய் இருவருமே தங்களுடைய வீட்டிற்கு வந்து விட்டார்கள். தாத்தா- பாட்டி இருவருமே காவிரி, விஜயை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.
விஜய், காவேரி வீட்டிற்கு வந்தவுடன் பாட்டி ரொம்ப சந்தோசமாக இருந்தார். பாட்டி, இங்கும் அங்கமாக சின்ன பிள்ளை போலவே ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருந்தார். வீடே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், சித்தப்பா மட்டும் விஜய் வந்ததை நினைத்து கோபப்பட்டார். பின் பாட்டி, நீ எங்கும் செல்லக்கூடாது. எங்களுடன் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்.
மகாநதி:
பின் காவிரி- விஜய் இருவரும் பாட்டியுடன் சந்தோஷமாக பேசினார்கள். இன்னொரு பக்கம் சித்தப்பா, கம்பெனியை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால் தாத்தா வேண்டாம் என்றார். அதற்குப்பின் சித்தப்பா சொன்னதை தாத்தா விஜய்யிடம் சொன்னார். அதனால் விஜய்-காவிரி இருவருமே கம்பெனி பொறுப்பை எடுப்பதை பற்றி யோசித்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி தன்னுடைய ரூமிற்கு சென்றவுடன் பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். அப்போது விஜய் ரூமிற்குள் வருகிறார். பின் இருவருமே ரொம்ப எமோஷனலாக தங்களுடைய பழைய நினைவுகளை பேசி சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் பாட்டி, காவிரிக்கு 5 மாதம் ஆகிவிட்டதால் கேலண்டரில் தேதி பார்த்து பூ முடிப்பதை பற்றி தன்னுடைய மகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் சாரதாவிற்கு ஃபோன் செய்த பாட்டி, காவிரிக்கு பூ முடிக்கும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார். சாரதா, எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் எல்லா விஷயத்தையும் செய்ய முடியும் என்று சொல்கிறார். அதற்கு பாட்டி, நீங்கள் வந்தால் மட்டும் போதும். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். மறுநாள் காலையில் விஜய்- காவிரி இருவரும் கீழே இறங்கி வருகிறார்கள். அப்போது வீடு முழுக்க பூவால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.