கல்யாணி சூழ்ச்சியில் சிக்கிய சாரதா, விஜய்-காவிரி நிலைமை என்ன? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் தாத்தா முதலில் மறுத்தாலும் பாட்டி சொல்வதை ஏற்றுக்கொண்டு விஜய்யை அந்த ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஒரு ஹாஸ்பிடலுக்கு மாற்றி விடுகிறார்கள். ஆனால், இந்த விஷயம் காவிரி குடும்பத்திற்கு தெரியாது. பின் சாரதா, காவிரியிடம் பேசுகிறார். குழந்தையை வைத்து சாரதா எமோஷனலாக பேசியும் காவிரி கண் விழிக்கவில்லை.
காவேரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்புகிறது. இதை அறிந்த பின் சாரதா குடும்பத்தின் எல்லோருமே காவிரியை பார்த்து பேசுகிறார்கள். காவிரி தன்னுடைய அம்மா, தங்கை எல்லோரும் விசாரித்துவிட்டு அப்பா எங்கே என்று கேட்கிறார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. உடனே டாக்டர் எல்லோரையும் வெளியே அழைத்துச் சென்று காவிரிக்கு தற்போது இருக்கும் ஞாபகம் எல்லாம் மறந்து விட்டது.
மகாநதி:
அவருடைய பழைய ஞாபகம் தான் இருக்கிறது என்று சொன்னார்கள். இதை கேட்டு சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது. விஜய், குழந்தை பற்றிய ஞாபகம் எதுவுமே காவிரிக்கு இல்லை. இதை அறிந்த விஜயின் சித்தி, கல்யானி இடம் சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று கல்யாணி, விஜய்- காவிரியை பிரிக்க திட்டம் போட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரியை பார்ப்பதற்கு விஜய்யின் பாட்டி கல்யாணி, தாத்தா இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறார்கள். சாரதா, காவிரிக்கு ஞாபகம் எதுவும் வரவில்லை என்று சொல்கிறார். அதற்குப்பின் வீட்டில் சாரதா குடும்பத்தை அழைத்த கல்யாணி, விஜயின் நிலமை ரொம்ப மோசமாக இருக்கிறது. அவன் கோமாவில் இருக்கிறான். வென்டிலேட்டர் எடுத்து விட்டால் அவன் உயிரோடு இருக்க மாட்டான். அந்த நிலைமையில் இருக்கிறான். காவிரிக்கும் ஞாபகம் எதுவும் இல்லை. காவிரியை நீங்கள் ஊருக்கே அழைத்துக் கொண்டு செல்லுங்கள்.
சீரியல் ட்ராக்:
குழந்தையை மட்டும் எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்கிறார். சாரதாவல் எதுவும் பேச முடியவில்லை. பின் கங்கா, அது எல்லாம் வேண்டாம். குழந்தையை நம்முடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். பின் கல்யாணியிடம் சாரதா, குழந்தையை மட்டும் நாங்கள் அழைத்துக் கொண்டு போகிறோம் என்கிறார். ஆனால், கல்யாணி ஒத்துக் கொள்ளவில்லை. கல்யாணி ஏதேதோ டிராமாவை செய்து குழந்தையை தன்னிடம் வைத்துக் கொள்ள முடிவெடுக்கிறார். சாரதா வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். பின் வீட்டிற்கு காவிரி வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது