விஜய்-காவேரியை பிரிக்க கல்யாணி செய்யும் சூழ்ச்சி , வேதனையில் சாரதா குடும்பம் - மகாநதி

By subhashini · 6/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் விஜய், காவிரி இருவரின் நிலைமையும் ரொம்ப மோசமாக இருப்பதால் வீட்டில் உள்ள எல்லோரும் ரொம்பவே பயப்பட்டார்கள். அந்த சமயம் அந்த போலீஸ் விபத்தை பற்றி விசாரித்தார்கள். அப்போது நிவின், ராகவ் தான் இதை செய்து இருப்பான் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் புகார் கொடுக்கிறேன் என்று போலீஸ் ஸ்டேஷன் போனார். இன்னொரு பக்கம் டாக்டர், காவிரி நிலைமை மோசமாக இருப்பதால் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றார்கள்.

பின் காவேரிக்கு ஆப்ரேஷனும் நடக்கிறது. வீட்டில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டிருந்தார்கள். காவிரிக்கு நல்லபடியாக பெண் குழந்தை பிறந்து விடுகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது பாட்டி தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து விஜய் இனிமேல் இங்கு இருக்க கூடாது. காவிரியுடன் இருந்தால் என் பேரனுக்கு இன்னும் ஆபத்துதான். அவனை வேறு ஒரு ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லலாம் என்று சொல்கிறார்.

மகாநதி:

விஜய் தாத்தா முதலில் மறுத்தாலும் பாட்டி சொல்வதை ஏற்றுக்கொண்டு விஜய்யை அந்த ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஒரு ஹாஸ்பிடலுக்கு மாற்றி விடுகிறார்கள். ஆனால், இந்த விஷயம் காவிரி குடும்பத்திற்கு தெரியாது. பின் சாரதா, காவிரியிடம் பேசுகிறார். குழந்தையை வைத்து சாரதா எமோஷனலாக பேசியும் காவிரி கண் விழிக்கவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்புகிறது. இதை அறிந்த பின் சாரதா குடும்பத்தின் எல்லோருமே காவிரியை பார்த்து பேசுகிறார்கள். காவிரி தன்னுடைய அம்மா, தங்கை எல்லோரும் விசாரித்துவிட்டு அப்பா எங்கே என்று கேட்கிறார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. உடனே டாக்டர் எல்லோரையும் வெளியே அழைத்துச் சென்று காவிரிக்கு தற்போது இருக்கும் ஞாபகம் எல்லாம் மறந்து விட்டது.

சீரியல் ட்ராக்:

அவருடைய பழைய ஞாபகம் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதை கேட்டு சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது. விஜய், குழந்தை பற்றிய ஞாபகம் எதுவுமே காவிரிக்கு இல்லை. இதை அறிந்த விஜயின் சித்தி, கல்யானி இடம் சொல்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று கல்யாணி, விஜய்- காவிரியை பிரிக்க திட்டம் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full