முதன் முதலாக அம்முவிற்காக காவிரி எடுத்த முடிவு, விஜய் ஏற்று கொள்வாரா? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி செய்த வேலை எல்லாம் தன்னுடைய தாத்தாவிடம் சொல்லி புலம்பினார் விஜய். அதற்குப்பின் பள்ளிக்கூடத்தில் விஜய், இனிமேல் நான் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. அதேபோல் நீங்கள் எனக்கு எந்த பெண்ணையும் பார்க்க தேவையில்லை. உங்கள் வேலையை பாருங்கள் என்றார். காவிரியும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு போனார். அங்கு சாரதா இல்லை. காவிரி, தன்னுடைய சகோதரிகளிடம் வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் வீடு முழுக்க தன் அம்மாவை தேடினார் காவிரி. ஆனால், எங்கேயுமே சாரதா இல்லை. இதனால் காவேரி ரொம்பவே பயப்பட்டார்.
காவிரி வீடு முழுக்க தன்னுடைய அம்மாவை தேடினார். அங்கு இல்லை என்றவுடன் தான் இருக்கும் தெரு, கோயில், கடை என்று எல்லா இடத்திலும் சாரதாவை தேடி அலைதார் காவிரி. எங்குமே சாரதா கிடைக்கவில்லை. பின் தன்னுடைய சகோதரிகளிடம் நடந்ததை சொல்லி காவிரி அழுதார். அதற்குப்பின் விஜய்க்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் காவிரி சொன்னார். உடனே விஜய் வீட்டிற்கு வந்து விட்டார். பின் விஜய், காவிரிக்கு சமாதானம் சொல்லி சாரதாவை தேடி அலைந்தார்கள்.
மகாநதி:
பஸ் ஸ்டாண்ட், கோவில் என்று பொது இடங்களில் எல்லாம் அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால், சாரதா எங்குமே இல்லை. இதனால் காவேரி ரொம்பவே உடைந்து விட்டார். ஒரு கட்டத்தில் காவிரி, சாரதாவை பார்த்து விட்டார். பின் தன் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். சாரதா, நீதான் என்னை வீட்டை விட்டுப் போக சொன்னாய். நான் கொடைக்கானல் போகிறேன் என்றார். விஜய், சாரதாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
சீரியல் ட்ராக்:
சாரதாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அப்போது விஜய் வீட்டிற்கு வெளியே நிற்கிறார். காவேரி, விஜயை வீட்டிற்குள் அழைத்தார். அதற்கு பின் விஜய்- காவேரி இருவரும் சாரதாவிற்கு அட்வைஸ் சொல்லினார்கள். அந்த சமயம் பார்த்து விஜய்க்கு போன் செய்து தாத்தா, அம்முவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சொன்னார். உடனே பதறி அடித்துக் கொண்டு காவிரி, விஜய் இருவரும் இணைக்க போனார்கள். அங்கு காவிரி, அம்முவை ரொம்பவே கவனமாக பார்த்துக் கொண்டார். அது எல்லாம் பார்த்து விஜய்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=DpMQQl9qqrQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பள்ளியில் மதர்ஸ் டே விழா நடைபெற இருக்கிறது. அதனால் மாணவர்கள் எல்லோருமே தங்களுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வர வேண்டும். அம்மு தன்னுடைய அம்மா இல்லாததால் ரொம்பவே சோகமாக இருக்கிறார். காவேரி, தன்னுடைய பெயரை அம்முவிற்காக கொடுத்து விடுகிறார். பின் அம்மு, விழாவிற்கு வரவில்லை என்கிறார். காவிரி சமாதானம் செய்கிறார். காவிரி, நாளை வழக்கம் போல அம்முவை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வாருங்கள். எந்த சங்கடமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை