கிருஷ்ணாவின் நரி வேலையால் சந்தேகப்படும் காவிரி, உண்மையை அறிவாரா விஜய்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கிருஷ்ணா,தன்னுடைய அம்மா, தங்கை இருவரையும் சந்தித்து, நாம் இங்கு எதற்காக வந்தோம்? யார் சொல்லி இங்க வந்தோம்? ஆனால், நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். காவிரிக்கு வளையல் போடுவது தான் நம்ம வேலையா? சொன்ன வேலையை செய்து முடித்துவிட்டு போகணும் என்று தன்னுடைய சுய ரூபத்தை காண்பித்தார். வீட்டில் எல்லோருமே வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்ததை பற்றி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள்.
அப்போது விஜய் போன் வந்ததால் வெளியே வந்தார். அங்கு கிருஷ்ணா ஒரு நபருடன் பேசிக் கொண்டிருப்பதை விஜய் கவனித்தார். அந்த நபர் வேறு யாருமில்லை பசுபதியின் மகன் ராகவ் தான். அதை பார்த்தவுடன் விஜய்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. ஆனால், விஜய் அதைப் பற்றி பேசவில்லை. பின் காவிரி வந்தவுடன் விஜய் அமைதியாகி விட்டார். மறுநாள் காலையில் விஜய்- காவேரி வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கிருஷ்ணாவை பார்த்த விஜய், உங்களுக்கு இந்த ஊரில் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? நேற்று நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்? என்றெல்லாம் விசாரித்தார்.
மகாநதி:
கிருஷ்ணா நான் யாருடனும் பேசவில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். விஜய், நான் தான் சரியாக கவனிக்கவில்லை என்றார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே பொங்கல் கொண்டாட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பின் நிவினை சந்தித்து குமரன் விஷயமாக விஜய் பேசி இருந்தார். அப்போது நிவின், குமரன் அண்ணா மலேசியாவில் இருந்து துபாய் போகவே இல்லை. மலேசியாவில் அவர் வேலை செய்யும் ஆட்களுடன் சண்டை ஏற்பட்டு சென்னைக்கு கிளம்பி இருந்தார். ஆனால், அவர் வீட்டிற்கு வரவில்லை. குமரன் அண்ணா என்ன செய்கிறார்? எங்கு இருக்கிறார்? என்று புரியவில்லை என்றார். இதை கேட்டு விஜய்க்கு அதிர்ச்சியாக இருந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் விஜய் செய்து கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் வேலை செய்யும் இடத்தில் பொருட்கள் வராததால் எந்த வேலையுமே நடக்கவில்லை. கிருஷ்ணா அதை அலட்சியமாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். அந்த சமயம் வந்த காவிரி, மேஸ்திரியிடம் விசாரிக்கிறார். அப்போது கிருஷ்ணா செய்த வேலை எல்லாம் காவிரிக்கு தெரிய வருகிறது.
சீரியல் ட்ராக்:
பின் இதைப் பற்றி கிருஷ்ணாவிடம் காவிரி கேட்கின்றார். ஆனால், அவர் சரியாக பதில் சொல்லாமல் சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை எல்லாம் சாரதா குடும்பத்தினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் விஜய்- காவிரி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது காவேரி, வேலை செய்யும் இடத்தில் கிருஷ்ணா செய்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதனால் விஜய்க்கு பயங்கர கோபம் வருகிறது. பின் விஜய், இனிமேல் இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.