விஜய்யின் பெயரை கேட்டு காவிரி சொன்ன வார்த்தை, ஷாக்கில் சாரதா- அடுத்து என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் யமுனா கலெக்டர் தேர்வில் பாஸ் ஆனதால் போஸ்டிங் கிடைத்ததாக சொல்லி சந்தோஷப்பட்டார். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் கோவிலில் குழந்தை காவிரியின் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார் விஜய். அப்போது தாத்தா, இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கல்யாணி இறந்துவிட்டார். விஜய் தன் மனைவி இறந்ததால் பிசினஸை விட்டு காஞ்சிபுரத்துக்கே வந்து குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எமோஷனலாக பேசி இருந்தார்.
காவேரி, எனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு பெரிய பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்திருக்கிறது என்று சொன்னார். இதைக் கேட்டு யமுனா, சாரதா எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். காவிரி, நாம் காஞ்சிபுரத்திற்கு சென்று விடலாம் என்று சொன்னார். முதலில் தயங்கினாலும் எல்லோரும் சொன்னதால் சாரதா ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் விஜயின் மகள், எனக்கு அம்மாவை பார்க்க வேண்டும். அழைத்து கொண்டு போகிறீர்களா என்றார்.
மகாநதி:
விஜய்யால் எதுவுமே பேச முடியவில்லை எமோஷனலாக கண் கலங்குகிறார். விஜய், சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அதற்குப் பின் விஜய், காவிரியின் போட்டோவை பார்த்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவேரி, தனக்கு புது வேலை கிடைத்ததால் சந்தோஷமாக இருந்தார். அடுத்த நாள் காலையில் விஜய் தன்னுடைய மகளை புது ஸ்கூலில் சேர்ப்பதற்கு குழந்தை காவிரியை ரெடி பண்ணுகிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயின் தாத்தா, பொய் சொல்லி காவிரியையும் விஜய்யும் பிரித்து வைத்திருப்பது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. காவிரி இங்கே இருந்திருந்தால் கூட அவளுக்கு பழைய ஞாபகம் வந்திருக்கும். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று தன் மனைவியின் போட்டோ முன்பு நின்று புலம்பி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் விஜய், தன்னுடைய மகளின் அட்மிஷனுக்காக ஸ்கூலுக்கு சென்று இருக்கிறார். இன்னொரு பக்கம் காவேரி காஞ்சிபுரத்திற்கு கிளம்புவதால் எல்லாம் பேக் செய்து கொண்டு இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது அங்கு வந்த டிரைவர், விஜய் என்ற பெயரை சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். விஜய் என்ற பெயரை கேட்ட உடனே காவிரிக்கு ஏதேதோ ஞாபகங்கள் வருகிறது. காவிரி ஒரு நிமிடம் அமைதியாகவே நின்று விடுகிறார். பின் தன் அம்மாவிடம் காவிரி, விஜய்ன்னு எனக்கு யாராவது தெரியுமா? அவரை நான் பார்த்திருக்கிறேனா? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றெல்லாம் கேட்கிறார். சாரதாவல் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி, அந்த பெயரை கேட்டால் எனக்கு என்னென்னவோ நினைவுகள் வருகிறது என்று சொல்கிறார். இருந்தாலும் சாரதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம்
விஜய் தன்னுடைய மகளுக்கு மகளுக்கு தங்களுடைய காதல் கதையை சொல்லி தூங்க வைக்கிறார்.