ராகவிற்கு நேர்ந்த விபரீதம், விஜய் மனைவியை பற்றி விசாரிக்கும் காவிரி - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அம்மு, சாப்பிட வந்தாலும், ஏதாவது கேட்டாலுமே காவிரி ஒரு ஆசிரியர் போலவே நடந்து கொண்டார். இதனால் அம்முவிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அம்மு, காவிரிக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அம்மு, நானும் உங்களுடன் வீட்டிற்கு வருகிறேன் என்றார். காவேரி, அதெல்லாம் தேவையில்லை. உன்னுடைய அப்பா வந்தவுடன் கிளம்பு. என் வீட்டிற்கு எல்லாம் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் அம்மு ரொம்பவே வருத்தப்பட்டார்.
ராகவ் வெளியே வந்திருக்கும் விஷயத்தை அறிந்து விஜய் ஷாக் ஆனார். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. ராகவ் எதற்கு உங்க குழந்தையை கடத்தனும் என்று கேட்டார். விஜய் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் விஜய்,காவேரி, அன்பரசு மூவருமே ராகவ் வீட்டிற்கு சென்றார்கள். ஆனால், அங்கு ராகவில்லை. அன்பரசு, ராகவ் கார் நம்பர் தெரியும். அதை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம் என்று சொன்னார். பின் ராகவ், காரை டிரேஸ் செய்து கொண்டு விஜய் போனார்.
மகாநதி:
இன்னொரு பக்கம் ராகவ், குழந்தை காவிரியை தன்னுடைய காரில் வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தார். பின் ஒரு இடத்தில் ராகவ் காரை நிறுத்தி என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார். அந்த சமயம் பார்த்து விஜய்யின் கார் வந்து விட்டது. விஜய், ராகவை பிடித்து அடிக்கிறார். காவேரி, குழந்தை அம்முவை காப்பாற்றி ஆறுதல் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், ராகவையும் அவருடைய அடியாட்களையும் அடி வெளுத்து வாங்குகிறார். ராகவ், விஜயிடம் இருந்து தப்பிக்கும் போது ஒரு லாரி மோதி விடுகிறது. இதனால் ராகவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். பின் அந்த இடத்திற்கு வந்த போலீஸ், விஜயிடம் நடந்ததை எல்லாம் விசாரிக்கிறார்கள். அதற்குப்பின் ராகவ் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள். இதைப் பற்றி
விஜய், தன்னுடைய தாத்தாவிற்கு சொல்கிறார். பின் அம்முவை அழைத்துக் கொண்டு எல்லோருமே வீட்டிற்கு போகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
மேலும், தாத்தா நேரமானாதால் காவிரியை அங்கேயே தங்க சொல்கிறார். அப்போது காவிரி உங்கள் மனைவி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?என்ன ஆனது? என்றெல்லாம் விசாரிக்கிறார். விஜய், என்னுடைய மனைவி இறந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், அவர் உயிரோடுதான் இருக்கிறார். சூழ்நிலை காரணமாக தான் நாங்கள் பிரிந்திருக்கிறோம் என்று சொல்கிறார். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு பின் தூக்கத்தில் அம்மு பயந்து போய் கத்தி அழுகிறார். காவிரி அவருக்கு ஆறுதலாக இருக்கிறார். அம்மு, நான் உங்களுடனே இருக்கிறேன். என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். காவிரியும் சரி என்கிறார். இதை எல்லாம் பார்த்து விஜய் எமோஷனலாக அழுகிறார்.