வேறு ஒருவரை திருமணம் செய்ய நினைக்கும் காவிரி, அம்மு எடுக்கும் விபரீத முடிவு - பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் காவிரி வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். சாரதா, இதை தன்னுடைய கணவர் பார்த்தால் சந்தோஷப்படுவார் என்று வருத்தப்பட்டார். உடனே அவருடைய மகள்கள் எல்லோருமே சாரதாவிற்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள். அதற்குப்பின் காவிரியிடம் கங்கா, விஜய் திருமணம் செய்து கொள்வதை பற்றி கேட்டார். காவிரி முடியாது என்று மறுத்து விட்டார். பின் கங்கா, யமுனா, நர்மதா மூவருமே விஜய்- காவேரி இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டார்கள்.
இன்னொரு பக்கம் நிவின், விஜயின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு நிவின், காவிரியின் குழந்தையை பார்த்து எமோஷனல் ஆனார். அதற்குப்பின் நிவின், விஜய் இருவரும் சந்தோஷமாக குடித்துக்கொண்டு பழைய நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிவின், ஆரம்பத்தில் என்னுடைய கல்யாணம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் நான் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். சீக்கிரத்திலேயே உங்களையும் காவிரியையும் சேர்த்து வைப்போம் என்றெல்லாம் சொன்னார். விஜய்யும் சந்தோஷப்பட்டார்.
மகாநதி:
கங்கா மீண்டும் மீண்டும் காவிரியின் திருமணத்தை பற்றிய பேசி கொண்டிருந்தார். காவேரி, என்ன சொன்னாலும் நான் விஜய்யை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். நீங்கள் வேறொரு மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்லி விட்டார். இதனால் கங்கா- யமுனா இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. அதற்குப்பின் கங்காவின் மகள் நோட்டு கேட்டதால் காவிரி அட்ட போட்டியில் இருந்து சில நோட்டுகளை எடுக்கப் போனார். ஆனால், அங்கு விஜயின் அப்பள விளம்பரத்திற்கான நோட்டீஸ் இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
அதை பார்த்தவுடன் காவேரி ஷாக் ஆனார். பின் இதை பற்றி கங்கா, யமுனாவிடம் காவிரி கேட்டார். அவர்களும் ஏதேதோ சொல்லி சமாளித்தார்கள். இருந்தாலும் காவிரிக்கு அதில் நம்பிக்கை இல்லை. பின் இதைப்பற்றி விஜய் இடம் கேட்பதற்காக அவருடைய வீட்டிற்கு கிளம்பினார் காவிரி. விஜயின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, விஜயின் அப்பளம் விளம்பர நோட்டீசை காண்பித்தார். அதை பார்த்தவுடன் விஜய் தன்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்துப் பார்த்து சந்தோசப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=4A8ZrS0XCew
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் அம்மு, சித்திக்கும் காவிரி மேமுக்கும் நிறைய சண்டை வந்துவிட்டது என்று சொல்கிறார். சித்தி, உன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி காவிரியிடம் கேட்டேன். அதனால்தான் கோபப்பட்டு சண்டை போட்டுவிட்டார் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் காவிரி தன்னுடைய வீட்டில் உள்ள எல்லோருமே அழைத்து நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். ஆனால், விஜய் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். இதை அறிந்த அம்மு, காவிரிவிடம் பேச வீட்டை விட்டு வெளியே போகிறார்