அம்முவிடம் கொஞ்சி விளையாடும் காவிரி, மகளை நினைத்து கவலையில் விஜய் - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அதற்குப் பின் விஜய், காவிரியின் போட்டோவை பார்த்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவேரி, தனக்கு புது வேலை கிடைத்ததால் சந்தோஷமாக இருந்தார். அடுத்த நாள் காலையில் விஜய் தன்னுடைய மகளை புது ஸ்கூலில் சேர்ப்பதற்கு குழந்தை காவிரியை ரெடி பண்ணுகிறார்.
விஜயின் தாத்தா, பொய் சொல்லி காவிரியையும் விஜய்யும் பிரித்து வைத்திருப்பது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. காவிரி இங்கே இருந்திருந்தால் கூட அவளுக்கு பழைய ஞாபகம் வந்திருக்கும். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று தன் மனைவியின் போட்டோ முன்பு நின்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய், தன்னுடைய மகளின் அட்மிஷனுக்காக ஸ்கூலுக்கு சென்று இருந்தார். இன்னொரு பக்கம் காவேரி காஞ்சிபுரத்திற்கு கிளம்புவதால் எல்லாம் பேக் செய்து கொண்டு இருந்தார்.
மகாநதி:
அப்போது அங்கு வந்த டிரைவர், விஜய் என்ற பெயரை சொல்லி பேசிக் கொண்டிருந்தார். விஜய் என்ற பெயரை கேட்ட உடனே காவிரிக்கு ஏதேதோ ஞாபகங்கள் வருகிறது. காவிரி ஒரு நிமிடம் அமைதியாகவே நின்று விட்டார். பின் தன் அம்மாவிடம் காவிரி, விஜய்ன்னு எனக்கு யாராவது தெரியுமா? அவரை நான் பார்த்திருக்கிறேனா? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றெல்லாம் கேட்டார். சாரதாவல் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி, அந்த பெயரை கேட்டால் எனக்கு என்னென்னவோ நினைவுகள் வருகிறது என்றார். இருந்தாலும் சாரதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
சீரியல் ட்ராக்:
காவேரி- சாரதா இருவரும் காஞ்சிபுரத்திற்கு வந்து விட்டார்கள். பின் தங்களுடைய புது வீட்டிற்கும் சென்று விட்டார்கள். காவிரி பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகிறது என்று தயாரானார். இன்னொரு பக்கம் விஜய் தன்னுடைய மகளை தயார் செய்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தார். விஜய்- காவிரி இருவரும் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லை. பின் காவிரி, தன் குழந்தை தான் என்று தெரியாமல் அம்முவிடம் பேசி இருந்தார். பின் விஜய் அழைத்தால் அம்மு சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய் தன்னுடைய மகளை பள்ளியில் விட்டு சென்று விடுகிறார்.
அம்மு அழுது கொண்டே இருக்கிறார். அப்போது வந்த காவேரி, அம்முவிற்கு ஆறுதல் சொல்லி நான்தான் உனக்கு கிளாஸ் டீச்சர் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். இன்னொரு பக்கம் விஜய், தன் மகள் எப்படி இருப்பாள் என்று கவலையில் இருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த காவிரி, அம்முவுடன் பேசியதை பற்றி எல்லாம் தன் அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது