அம்மு-காவேரி பாண்டிங்கை கண்டு ஆனந்த கண்ணீர் விடும் சாரதா - மகாநதி
அம்மு-காவிரி ரீயூனியன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், என்னால் உண்மையை மறைக்க முடியவில்லை. அதனால் நடந்த எல்லாவற்றையும் நான் அம்மிடம் சொல்லிவிட்டேன் என்றார். இதைக் கேட்டு விஜய் அதிர்ச்சி அடைகிறார். எதற்காக இப்படி செய்தீர்கள் என்றார். ராதா, எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்? அம்மு எல்லாவற்றையும் புரிந்து கொள்வாள் என்றெல்லாம் சொன்னார். பின் விஜய், அம்முவை சந்தித்து பேசுகிறார் என்றார். விஜய், அவருக்கு பழைய ஞாபகம் எதுவுமே இல்லை. சீக்கிரத்திலேயே அம்மா நம்முடன் வந்து விடுவார். நீ இதைப் பற்றி உன்னுடைய மிஷ்ஷிடம் சொல்லாதே என்று என்றார். அம்முவும் சரி என்றார்.
காவிரி, அம்மு தன்னிடம் சரியாக பேசாமல் இருந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த கங்கா, சாரதா இருவரும் விசாரித்தார்கள். காவிரி, அங்கு வீட்டில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ? அம்முவின் அப்பாவும் கோவமாக பேசுகிறார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்ப கவலையாக இருக்கிறது என்றார். சாரதா, அதெல்லாம் ஒன்றும் இல்லை பார்த்துக்கொள்ளலாம் நீ எதையும் யோசிக்காதே என்று சமாதானம் செய்தார்கள். மறுநாள் காலையில் சாரதா- கங்கா இருவருமே விஜயின் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது யாழினி-அம்மு இருவரும் பேசிக்கொண்ட விஷயத்தை எல்லாம் சாரதா சொன்னார்.
மகாநதி:
விஜய், அம்முவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன். ஆனால், அவளிடம் அதைப் பற்றி எதுவும் கேட்டுக்காதீர்கள் என்றார். அதற்குப்பின் சாரதா- கங்கா இருவரும் அம்முவை பார்த்து பேசி இருந்தார்கள். அம்மு காவிரியை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். சாரதா, சீக்கிரத்திலேயே நாம் எல்லோரும் சேர்ந்து இருப்போம் கவலைப்படாதே என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்திற்கு அம்முவை தயார் செய்தார். இன்னொரு பக்கம் காவேரி, வீட்டில் அம்மாவும் அக்காவும் இல்லாததை பற்றி நர்மதாவிடம் கேட்டார்.
சீரியல் ட்ராக்:
அம்மு பள்ளிக்கூடத்திற்கு அழகாக தயாராகி வந்தார். விஜய், காவிரியிடம் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது என்று அம்மு சொல்லக்கூடாது என்றார். அம்மு சரி என்றார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்முவை பார்த்து காவிரி ரொம்ப எமோஷனலாக விசாரித்தார். அம்முவும் ரொம்ப சந்தோஷமாக தன்னுடைய அம்மாவிடம் பேசி இருந்தார். ஆனால், உண்மையை எதுவுமே சொல்லவில்லை. பின் கிளாஸ் ரூமில் அம்மு, என்னுடைய அம்மா இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்று தன்னுடைய நண்பர்களுடன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், தன்னுடைய அம்மா காவிரி தான் என்று உண்மையை சொல்லவில்லை.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் அம்மு, அம்மாவை பார்க்க போகலாமா? என்று கேட்கிறார். விஜய்யும் சரி என்று காவேரி வீட்டுக்கு அழைத்து வருகிறார். அம்முவை பார்த்தவுடன் காவிரி ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் காவேரி-அம்மு இருவரும் ஒன்றாக சேர்ந்து தூங்குகிறார்கள். அதை பார்த்து சாராத எமோஷனலாகிறார்.