கங்கா சொன்ன வார்த்தையால் எரிமலையாய் வெடித்த காவிரி, நிவின் எடுக்க போகும் முடிவு என்ன? மகாநதி

By subhashini · 22/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் பாட்டியை பார்க்க விஜய்- காவிரி இருவருமே போனார்கள். அப்போது தாத்தா, இரவில் இருந்தே பாட்டி பயந்து புலம்புகிறார். என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றார். பின் பாட்டியை பார்த்த விஜய், என்னானது பாட்டி? தைரியமாக இருங்கள் என்றார். அதற்கு பாட்டி, நீ என்னுடனே இரு. எங்கும் போகாதே என்றார். காவிரி, பாட்டியிடம் விசாரித்தார். உடனே பாட்டி, காவிரியை தள்ளிவிட்டு நீதானே விஜயை என்னிடமிருந்து பிரித்துப் போனாய்? நீ இங்கிருந்து போ என்றெல்லாம் திட்டினார்.

விஜயின் பாட்டி வழக்கம் போல் காவிரியை தான் திட்டிக் கொண்டிருந்தார். விஜய் ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் பாட்டியை அழைத்துக் கொண்டு விஜய் ஹாஸ்பிட்டலுக்கு சென்றார். பின் தாத்தா- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தாத்தா, நீ விஜயை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடு. அப்போது தான் பாட்டி நன்றாக இருப்பார். எனக்கு சத்தியம் செய் என்றார். அதற்கு காவிரி, விஜய்யை உங்களிடம் சேர்த்து வைப்பேன் என்று சத்தியம் செய்தார்.

மகாநதி:

அதற்கு பின் ஹாஸ்பிடலில் இருந்த பாட்டி நன்றாக பேசிக் கொண்டிருந்தார். விஜய், பாட்டி, தாத்தா எல்லோருமே கலகலப்பாக பேசி இருந்தார்கள். அதற்குப்பின் பாட்டியை தூங்க வைத்துவிட்டு விஜய்- காவிரி இருவருமே தங்களுடைய வீட்டிற்கு வந்துவிட்டார்கள். பின் காவிரி வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கங்கா, கொடைக்கானல் வீட்டை விற்பனைக்கு கேட்பதாக தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். உடனே கோபப்பட்ட காவிரி, எதற்காக விற்கணும்? என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரி, அப்பா கஷ்டப்பட்டு கட்டின வீடு. அதை விற்க ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு கங்கா, இங்கே இருந்து கொண்டு அந்த வீட்டையெல்லாம் பார்த்துக் கொள்ள முடியாது. வீட்டை விற்பது தான் சரி. உனக்கு ஊருக்கு போகணும் என்றால் ரூம் போட்டு கொடைக்கானலில் தங்கி விட்டு வா என்றெல்லாம் சொல்கிறார். இருந்தாலுமே கேட்காமல் காவிரி ரொம்ப எமோஷனலாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார். சாரதாவுமே என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் விஜய்-காவிரி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவேரி, பாட்டியின் உடம்பு சரியில்லாமல் இருப்பதால் வீட்டிற்கு சென்று விடலாம் என்றெல்லாம் நாசுக்காக சொல்லி பார்க்கிறார். ஆனால், விஜய் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் நிவின் அம்மா, எதற்காக இப்படி கஷ்டப்படுகிறாய். உனக்கு பணத்தை நான் தருகிறேன். நீ யமுனாவிற்கு விவாகரத்து கொடுத்துவிடு. இந்த சொத்து முழுவதும் நீதான் அனுபவிக்கணும். உனக்கு பிடித்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என்றெல்லாம் சொல்கிறார். இதைக்கேட்டு யமுனாவிற்கு பயங்கர கோபம் தான் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full