விஜயை கேவலமாக பேசும் கங்கா, கோபத்தில் கொந்தளித்த காவிரி - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் மளிகை சாமானை வாங்க குமரன் போனார். உடனே கங்கா தடுத்து நிறுத்தி அவர்களே வாங்கிக் கொள்ளட்டும். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்றார். இதெல்லாம் குமரனுக்கு புரியவே இல்லை. இன்னொரு பக்கம் விஜய், வேலைக்கு செல்வதற்காக கம்பெனிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காவிரி, நீங்கள் உங்களுடைய கம்பெனியை பார்க்கலாம் என்றார். அதற்கு விஜய், இப்போதைக்கு வேண்டாம், நான் தனியாக வேலைக்கு செல்லலாம் என்று இருக்கிறேன். அதையெல்லாம் தாத்தா பார்த்துக் கொள்வார் என்று காவிரியை சமாதானம் செய்தார்.
நேற்று எபிசோட்டில் நிவின் இடம் மீண்டும் காவிரியை பற்றி பேசி யமுனா சண்டை வாங்கினார். ஒரு கட்டத்தில் யமுனா, காவிரி வயிற்றில் வளர்வது உண்மையாலுமே விஜய் குழந்தையா? என்றார். இதனால் கோபப்பட்ட நிவின், ஸ்பூனை தரையில் அடித்து அது யமுனாவின் தலையில் அடிபட்டு விட்டது. இன்னொரு பக்கம் சாரதா சொல்லும் வேலை எல்லாம் குமரன் செய்வதால் கோபப்பட்டு கங்கா திட்டிக் கொண்டிருந்தார். இருந்தாலுமே சாரதா சொன்னவுடன் அங்கிருந்து குமரன் கிளம்பி விட்டார். அந்த சமயம் பார்த்து யமுனா, கங்காவை பார்க்க வந்தார்.
மகாநதி:
அப்போது யமுனா, காவிரியை பற்றி வழக்கம்போல திட்டிக் கொண்டிருந்தார். பதிலுக்கு கங்காவுமே விஜய், காவிரியை பற்றி புலம்பி கொண்டிருந்தார். கங்கா யமுனா இருவருமே சேர்ந்து காவிரியின் மீது பொறாமை பட்டு வன்மத்தை கொட்டிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் விஜய் வேலைக்காக பார்த்துக் கொண்டிருந்தார். காவிரி எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்கவில்லை. சாரதாவும் பார்த்து பார்த்து விஜய், காவிரியை கவனித்துக் கொண்டார். பின் யமுனா சுற்றி சுற்றி காவிரியை பற்றி தான் திட்டிக்கொண்டே இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய்க்கு பார்த்து பார்த்து சாரதா சமைத்து வைத்திருக்கிறார். பின் குமரன்- விஜய் இருவருமே சேர்ந்து சாப்பிடுகிறார்கள். அதற்கு பின் வீட்டில் கங்கா, சாரதா, பாட்டி மூவருமே துணி மடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது குமரனை கடைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் என்று சாரதா சொல்கிறார். இதை கேட்டவுடன் கோவப்பட்ட கங்கா, எப்ப பார்த்தாலும் அவரே வேலை செய்யணுமா? விஜய் அப்படின்னா ஒஸ்தியான மாப்பிள்ளையா? அவரே அடுத்த வேலை காசுக்கு நம்மகிட்ட வந்து நிக்கணும் என்றெல்லாம் ரொம்ப தரகுறைவாக விஜய் பற்றி பேசுகிறார். இதைக் கேட்டு கோவப்பட்ட காவிரி, கங்காவிடம் சண்டைக்கு போகிறார்.
சீரியல் ட்ராக்:
கடைசியில் காவிரி, விஜய் எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். நீ ரெண்டு வேளை சாப்பாடு போட்டு சொல்லி காமிக்க தேவையில்லை. அவரை பார்த்துக்க நான் இருக்கிறேன் என்று திட்டி விட்டு செல்கிறார்.
ஆனால், இதெல்லாம் விஜய்க்கு தெரியவில்லை. அதற்கு பின் விஜய், சாரதா- காவிரியை அழைத்துக் கொண்டு பார்க்கிங்க்கு வந்து இருக்கிறார். மூவருமே ஜாலியாக பேசிக்கொண்டு வாக்கிங் போகிறார்கள். அப்போது சாரதா, பசுபதி செய்த வேலையை பற்றி ரொம்ப விமோசனாக பேசி அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.