முத்துமலர் குடும்பம் கொடுத்த நோட்டீசால் ஆடிப்போன காவேரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்து மலர், எனக்கு கல்யாணம் ஆகி 25 வருடங்கள் ஆகிறது. நாங்கள் கத்தாரில் தான் இருந்தோம் என்றெல்லாம் சொன்னார். இதெல்லாம் பொய் என்று சாரதா- காவிரி சொன்னார்கள். இருந்தாலுமே விடாமல் முத்து மலர், அவரை நம்பி தான் இத்தனை நாட்களாக இருந்தோம். இப்போது எங்களுக்கு என்று யாரும் இல்லை. சொத்தை விற்பதாக தெரிந்தது. அதனால்தான் நாங்கள் பங்கு கேட்டு வந்தோம் என்று சொல்லி தங்களிடம் இருக்கும் ஆதாரத்தை எல்லாம் காண்பித்தார்கள். போலீசுமே அதை பார்த்தார்கள். போலீஸ், பத்திரம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.
நீங்கள் தான் பேசிக்கொள்ளனும் என்றார். சாரதா, ஒரு தூசி கூட என்னால் தர முடியாது. ஒழுங்கு மரியாதையாக கிளம்ப சொல்லுங்கள் என்றார். அதற்கு முத்துமலர், எங்களுடைய சொத்து பங்கு வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றார்கள். உடனே போலீஸ், நீங்கள் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு முத்து மலர், கோர்ட்டில் தீர்ப்பு வர தாமதமாகும். இங்கேயே பேசி முடிவெடுங்கள் என்றார். சாரதா ஒத்துக்கொள்ளவில்லை. பங்கை வாங்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என்று முத்துமலர் குடும்பம் அங்கேயே உட்காருகிறது.
மகாநதி:
பின் வீட்டுக்குள் சாரதா ரொம்பவே உடைந்து போய் பேசிக் கொண்டிருந்தார். தன் கணவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்று புலம்பி கொண்டிருந்தார். சாரதா, கங்கா இருவருமே சொத்தை காவிரி பெயரில் மாற்றிவிடலாம். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஐடியா கொடுத்தார்கள். அதற்கு விஜய், பிரச்சனை வருமே, என்ன செய்வது என்றார். அதற்கு சாரதா, காவிரி பெயரில் இருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. அதற்கான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார். விஜய், நாளை தான் ரிஜிஸ்டர் பண்ண முடியும். இன்னிக்கு முடியாது அமைதியாக இருங்கள் என்று சமாதானம் சொன்னார்.
சீரியல் ட்ராக்:
சாரதா, உன் மகன் யோகியமானவனா? இங்கு ஒரு குடும்பம், அங்கு ஒரு குடும்பம் வைத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கிறான். இவ்வளவு கேடுகெட்டவனா? என்றெல்லாம் சந்தானத்தை திட்டிக் கொண்டிருந்தார். பின் தன்னுடைய கணவர் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து சாரதா உடைந்து போயிருந்தார். அவருடைய மகள்கள் எல்லோருமே ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலுமே சாரதாவால் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப்பின் காவிரி, தன்னுடைய அப்பா தனக்காக செய்ததெல்லாம் நினைத்துப்பட்டு ரொம்ப எமோஷனலாக அழுது விஜய்யிடம் பேசிக் கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=7d9qKrAgnzA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சாரதா, உங்கள் பிள்ளை என்னை ஏமாற்றி விட்டான். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். சிந்து, கிருஷ்ணா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இன்னும் என்னென்ன நதி எல்லாம் வரப்போகிறது தெரியவில்லை என்று அழுது புலம்புகிறார். அதற்குப்பின் விஜய், நாங்கள் இரண்டு மணி நேரம் வெளியே போக போகிறோம் என்று சொல்கிறார். இதை கேட்ட முத்து மலரின் மகன், அதுக்குள்ள ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிவிடலாம் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணக்கூடாது என்று கோர்ட் ஆர்டர் வாங்கி வந்திருக்கிறேன் என்று நோட்டீசை காண்பிக்கிறார். இதை பார்த்து காவேரி ஷாக் ஆகிறார்.