சாரதாவின் முட்டாள்தனத்தை நினைத்து கொந்தளிக்கும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் தாத்தா, பாட்டி இருவருமே முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொன்னார். இதனால் விஜய் வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து சொத்தில் ஒரு பங்கு தருகிறோம். இல்லை என்றால் கோர்ட்டில் கேசை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் வீட்டை விட்டு வெளியே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு முத்து மலர், நாங்கள் எங்கே போக முடியும்? எங்களுக்கான பங்கை கொடுத்து விடுங்கள். நாங்கள் கிளம்பி விடுகிறோம் என்றார்.
விஜய், முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொன்னார். ஆனால், அவர்கள் போக முடியாது என்று வீட்டுக்குள்ளே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இதனால் கொந்தளித்த விஜயின் சித்தப்பா, முத்துமலரை பிடித்து தள்ளுகிறார். இதனால் வீட்டில் பெரிய கலவரமே வந்தது. பின் விஜய் போலீசுக்கு போன் செய்து வரவைத்தார். விஜயின் வீட்டிற்கு வந்த போலீஸ், முத்துமலர் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். அதற்கு கிருஷ்ணா, நாங்கள் சொத்தில் சரி பாதி தான் கேட்கிறோம். நாங்கள் எந்த பிரச்சினையும் செய்யவில்லை என்றார். அதற்கு போலீஸ், இவர்தான் சந்தானத்தின் மனைவி என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றார்.
மகாநதி:
உடனே கிருஷ்ணா, தன்னுடைய அம்மாவின் திருமண பதிவை காண்பித்தார். இதை பார்த்து சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது. அதற்குப்பின் போலீஸ் சாரதாவிடம் திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறீர்களா? என்றார். அதற்கு சாரதா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்றார். அப்போ சட்டப்படி முத்துமலர் தான் சந்தானத்தின் மனைவி என்று போலீஸ் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் சாரதாவின் குடும்பத்திற்கு தலை மேல் இடி விழுகிறது. கிருஷ்ணா தன்னுடைய அம்மா, தங்கையை உள்ளே அழைத்துக் கொண்டு போனார். விஜய் கோபத்தில் இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா, இப்படியெல்லாம் திருட்டுத்தனம் பண்ணி அவளை மாரி புத்திசாலித்தனமாக கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண எனக்கு தெரியவில்லை. நாங்கள் கல்யாணத்தை முடித்துவிட்டு கோயிலுக்கு போனோம். கொடைக்கானல் வீட்டில் அவருடன் சேர்ந்து எடுத்த கல்யாண போட்டோ இருக்கு. மற்றபடி எந்த ரெஜிஸ்டரும் செய்யவில்லை என்று அழுது புலம்புகிறார். கோபத்தில் காவிரி- கங்கா இருவருமே தன்னுடைய அம்மாவின் முட்டாள்தனத்தை நினைத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் விஜய் அவர்கள் மூவருக்குமே ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பாட்டி, கிருஷ்ணா-சிந்துவுடன் எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து காவிரிக்கு கோபம் வருகிறது. உடனே விஜய், உனக்கு இருக்கும் வலி வேறு அவர்களுக்கு இருக்கும் வலி வேறு புரிந்துக்கொள் என்று அறிவுரை சொல்கிறார். அதற்கு பின் விஜய், கங்கா, காவிரி மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜய்யின் பாட்டி, தாத்தா, சித்தி மூவருமே காவேரி குடும்பம் செய்யும் வேலையை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த விஜய், காவிரியின் நிலைமைக்காக அமைதியாக இருங்கள். சீக்கிரமாகவே இந்த பிரச்சினை முடித்து விடுகிறேன் என்று தன்னுடைய பாட்டியை சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.