விஜய்யின் பாட்டி சொன்ன வார்த்தையால் கொந்தளித்த காவிரி, சாரதா என்ன செய்ய போகிறார்? மகாநதி

By subhashini · 23/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்யின் ஆபீஸில் கஸ்டமர்ஸ் எல்லோருமே தங்களுடைய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை செய்து முடிக்கவில்லை என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். பின் விஜய்- காவேரி இருவரும் நேரடியாக ஆபீசுக்கு வந்தார்கள். அங்கு கஸ்டமர்கள் பயங்கரமாக கலவரம் செய்து கொண்டிருந்தார்கள். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பிரச்சனை என்று விசாரித்தார். அப்போது கஸ்டமர் கோபமாக நடந்தது எல்லாம் சொன்னார். இதை கேட்டு விஜய்- காவிரி இருவரும் ஷாக் ஆனார்கள். ஓரமாக நின்று சித்தப்பா சிரித்துக் கொண்டிருந்தார்.

வேலையை முடித்து தராததால் கஸ்டமர்கள் எல்லோருமே கொந்தளித்து விஜய் ஆபீசில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். விஜய்- காவிரி இருவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. பின் தன்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்களிடம் விஜய், என்ன நடக்கிறது என்றார். அப்போது அவர்கள், இதை தான் நாங்கள் ரொம்ப நாட்களாக சொல்லலாம் என்று இருந்தோம். ஆனால், உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை காரணமாக சொல்ல முடியவில்லை. உங்களுடைய சித்தப்பாவிடம் சொன்னோம் என்றார். உடனே சித்தப்பா ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் விஜய், எல்லோரிடமும் டைம் வாங்கினார். ஆனால், யாரும் கேட்கவில்லை.

மகாநதி:

காவேரி, என்னால் தான் உங்களுக்கு இந்த பிரச்சனை என்று ரொம்ப வருத்தப்பட்டு பேசினார். விஜய் அவருக்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் கஸ்டமர் எல்லோருமே பேட்டியில் விஜய் கம்பெனியை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார்ர்கள். இதை டிவியில் பார்த்த தாத்தா, பாட்டி இருவரும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள். பின் பாட்டி, விஜய் இடம் பேசி பிரச்சினையை பார்க்க சொல்லுங்க என்றெல்லாம் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் நர்மதா, முத்துமலர் குடும்பம் இருக்கும் இடத்திற்கு சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பசுபதி ஏமாற்றிய வேலை எல்லாம் நர்மதா சொன்னார். இதைக் கேட்டு கிருஷ்ணா, சிந்து எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரி இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது விஜயின் பாட்டி, எங்கள் பேச்சை கேட்டாயா? காவிரி குடும்பத்து பிரச்சனையை தலையில் வைத்துக்கொண்டு ஆபீஸ் வேலையை கவனிக்கவில்லை. அதனால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்கு பார். எப்போதுதான் நாங்கள் சொல்வதை கேட்பாய் என்றெல்லாம் காவிரி குடும்பத்தை மோசமாக பேசுகிறார். இதனால் கொந்தளித்த காவிரி, என்னுடைய குடும்பத்தை அப்படியே விட்டுவிட்டு வர முடியாது. என்னுடைய குடும்பம் இங்கு வருவதற்கு காரணம் விஜய் தான். அவர்தான் பேசி அழைத்து வந்தார். நான் ஒன்னும் கூப்பிடவில்லை.

சீரியல் ட்ராக்:

அதேபோல் அவர் பிரச்சனையில் இருப்பது எனக்கு தெரியும். தயவுசெய்து எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என்று அங்கிருந்து சென்று விடுகிறார். பின் விஜய், தன்னுடைய தாத்தா பாட்டியிடம் எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். இது எல்லாம் கங்கா கேட்டு விடுகிறார். பின் இதைப்பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி கங்கா வருத்தப்படுகிறார். சாரதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
அதற்குப்பின் விஜய் தலை வலிக்கிறது என்று சொல்வதால் காவேரி காபி போட்டு கொடுத்து தலையை பிடித்து விடுகிறார். காவேரி, என்னால் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை. சீக்கிரமாகவே சரி செய்து விடலாம் என்றெல்லாம் சொல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full