காவிரியை பழிவாங்க யூடூயூபர் செய்த வேலை, விஜய் என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் பசுபதி, நீ எப்படியாவது அழுது டிராமா செய்து விஜயை திருமணத்திற்கு சம்மதிக்க வை. அது உன் கையில் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் வெண்ணிலாவும் சரி என்றார். இன்னொரு பக்கம் விஜய், நிவினை சந்தித்து பேசி இருந்தார். அப்போது நிவின், வெண்ணிலா காவிரியிடம் செய்த பிரச்சனையை பற்றி பேசி இருந்தார். அதற்கு விஜய், நான் கூடிய சீக்கிரத்திலேயே இந்த பிரச்சனைக்கு முடிவு செய்கிறேன். எதுவாக இருந்தாலும் நானும் காவிரியும் சேர்ந்து வாழ்வதில் எந்த மாற்றமும் இல்லை என்பர் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் காவிரியின் அம்மா, நீ தயவு செய்து இந்த தாலியை கழட்டி விடு.
விஜய்க்கு விவாகரத்து கொடுத்துவிடு. நீ எப்படி எதுவுமே நடக்காது போல் இருக்கிறாய். என்னால் முடியவில்லை என்று பேசி இருந்தார். உடனே காவிரி, என் பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் நிம்மதியாக இருங்கள் என்று சொன்னார். கடைசியில் விஜயின் வீட்டிற்கே வெண்ணிலா வந்து விட்டார். அப்போது விஜய் கோபப்பட்டு கத்தி இருந்தார். வெண்ணிலா, நீ தான் என்னுடைய புருஷன். நாளை உனக்கும் எனக்கும் கோவிலில் கல்யாணம் என்றெல்லாம் அழுது புலம்பி டிராமா செய்தார். அதற்கு விஜய், அது முடியாது. என்றைக்குமே காவிரி தான் என் மனைவி. உனக்கு நான் பாவம் பார்த்தது தான் தப்பு. உன்னை பார்த்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று கோபப்பட்டு கத்தி இருந்தார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் வெண்ணிலா, எனக்கு கல்யாணம் செய்ய வேண்டும். மாப்பிள்ளை நீதான். நாளை உனக்கும் எனக்கும் கோயிலில் தான் கல்யாணம். உன்னை எப்படி வர வைக்கணும் என எனக்கு தெரியும் என்று சவால் விட்டார். ஆனால், விஜய் அது எல்லாம் கண்டு கொள்ளாமல் காவிரி தான் தன்னுடைய மனைவி என்பதில் உறுதுணையாக இருக்கிறார். மறுநாள் காலையில் வெண்ணிலா திருமண கோலத்தில் தயாராகி கோவிலில் காத்துக் கொண்டிருந்தார். மீடியாக்கள் வெண்ணிலாவிடம் பேட்டி எடுத்தார்கள். அப்போது வெண்ணிலா, விஜய் கண்டிப்பாக வருவார். விஜய் என்னைத்தான் காதலிக்கிறார். அவரை வர விடாமல் காவிரி தடுக்கிறார் என்றெல்லாம் காவிரி குடும்பத்தின் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதை டிவியில் பார்த்த காவிரி பெரிதாக கண்டுகொள்ளாமல் பொருட்காட்சிக்கு கிளம்ப பார்த்தார். அப்போது அவர் அம்மா, நீ வெளியில் போக வேண்டாம். வீட்டிலேயே இரு என்றார். ஆனால், காவேரி பொருட்காட்சிக்கு கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் டிவியில் வெண்ணிலா பேசுவதை பார்த்து கோபப்பட்டு நிவின், வெண்ணிலாவை திட்டிக் கொண்டிருந்தார். இதை பார்த்த யமுனா, உங்களுக்கு நிஜமாகவே விஜய்- காவேரி சேர்வதில் சந்தோஷமா? என்று கேட்டார். அதற்கு நிவின், ஆமாம். உன்னை போல் என்னால் அவர்களை பிரித்த குற்ற உணர்ச்சியில் இருக்க முடியாது. அவர்களை சேர்த்து வைக்க தான் முயற்சி செய்வேன் என்றார். அதற்கு யமுனா, நிவினையும்-காவிரியும் சேர்த்து வைத்து ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதைக் கேட்டவுடன் கோபப்பட்டு நிவின், யமுனாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வெண்ணிலா பேட்டி கொடுத்ததை டிவியில் பார்த்து விஜய்யின் தாத்தா, பாட்டி இருவருமே ரொம்ப வருத்தப்படுகிறார்கள். ஆனால், விஜய் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கூலாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் காவிரியும் எதையும் கண்டுகொள்ளாமல் பொருட்காட்சிக்கு கிளம்புகிறார். அப்போது காவிரி, எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்று வாய்ஸ் மெசேஜ் போடுகிறார். அதைக் கேட்ட விஜய் ரொம்ப சந்தோஷப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் அதை தன் தாத்தா, பாட்டி இடமும் காண்பித்து அவர்களையும் சமாதானம் செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் பொருட்காட்சிக்கு வந்த காவிரியின் அம்மா, அங்கு வேலைக்கு இரண்டு பேர் இருப்பதை பார்த்து கேட்கிறார். காவிரியும் ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார். அப்போது youtuber ஒருவர் காவிரியிடம் விஜய் திருமணத்தைப் பற்றி பேட்டி எடுக்கிறார். இதனால் கோபப்பட்ட காவிரி, அவரிடம் சண்டை போட்டு போனை கீழே போட்டு உடைத்து விடுகிறார். பின் தன்னுடைய அம்மாவையும் சமாதானம் செய்து விடுகிறார். அதற்குப்பின் பொருட்காட்சி இடத்திற்கு விஜய் வருகிறார். அங்கு அவரிடம் கடையில் வேலை செய்பவர்கள் மீடியா நபர் செய்த தொந்தரவை சொன்னவுடன் அவர் ரொம்ப வருத்தப்படுகிறார். பின் விஜய், காவிரிக்கு ஆறுதலாக பேசுகிறார். அப்போது அந்த youtuber மீண்டும் விஜய் வந்திருப்பதை பார்த்து மோசமாக காவிரியை பற்றி பேசி வீடியோ போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.