வெண்ணிலா சொன்ன வார்த்தைக்காக காவிரி எடுத்த அதிரடி முடிவு, உண்மையை அறிவாரா விஜய்? மகாநதி

By subhashini · 23/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் தரப்பு வக்கீல், விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று வெண்ணிலா சொன்ன விஷயத்தை காண்பித்தார்கள். இரு தரப்பில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் காவேரி வெண்ணிலாவை அழைத்து வருவதை பசுபதி ஆட்கள் பார்த்துவிட்டு துரத்தினார்கள். காவிரி, வெண்ணிலா இருவருமே தப்பித்து ஓடினார்கள். ஒரு வழியாக பசுபதியின் ஆட்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு காவிரியை வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு வந்தார். கோர்ட்டிலுமே விஜய் பக்கம் நிரூபிக்க ஆதாரம் வேண்டும் என்று சொன்னார்கள்.

கோர்ட்டில் பசுபதியை விஜய், குமரன், நிவின் மூவருமை அடித்த வீடியோவை சமர்ப்பித்தார்கள். விஜய்க்கு எதிராகவே ஆதாரம் எல்லாம் இருந்தது. அதற்குப்பின் கோர்ட்டுக்கு வந்த நிவின், பசுபதியை நான் கோர்ட்டுக்கு தான் அழைத்து வந்தேன். ராகினி டிராமா போட்டு தப்பித்து விட்டார்கள் என்றார். வெண்ணிலா சுயநினைவுக்கு வந்தாரா? என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்கள். பின் குமரன் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவரும் வெண்ணிலாவின் மாமாவை அழைத்து வர முடியவில்லை என்று புலம்பி இருந்தார். என்ன செய்வதென்று புரியாமல் விஜய் தவித்து கொண்டு இருந்தார்

மகாநதி:

நேற்று எபிசோட்டில் கோர்ட்டுக்கு வந்த குமரன், நான் வெண்ணிலாவின் மாமாவை காப்பாற்றி அழைத்துக் கொண்டு வந்தேன். ஆனால், அங்கு பசுபதி நாட்கள் என்னை அடித்து விட்டு வெண்ணிலாவின் மாமாவை மீண்டும் கடத்தி சென்று விட்டார்கள் என்று சொன்னார். ஆனால், குமரன் சொன்னதை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாமே விஜய்க்கு எதிராகவே இருந்தது. அந்த சமயம் பார்த்து காவேரி, வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டார். அப்போது வெண்ணிலா, நான் தற்கொலை செய்யவில்லை.

நேற்று எபிசோட்:

என்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டது பசுபதி தான். விஜய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவுசெய்து விஜயை விடுதலை செய்யுங்கள் என்று எல்லாம் நடந்த எல்லா உண்மையை சொன்னார். இதனால் நீதிபதி விஜயை விடுதலை செய்தது. அதோடு பசுபதியை கைது செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவு போட்டார்கள். பின் வீட்டிற்கு விஜயை அழைத்து வந்து எல்லோருமே ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். அதோடு பசுபதியை போலீஸ் கைது செய்ததாக கூறப்படத்துகிறது. ஆனால், காவேரி, விஜயை விட்டு போவதை நினைத்து மனதுக்குள்ளே வேதனைப்பட்டு கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய் வெளியே வந்ததால் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாட்டி மட்டும் கோபத்தில் ரூமிற்கு சென்று விடுகிறார். அப்போது காவிரியை பார்த்து பாட்டி பயங்கரமாக திட்டுகிறார். உன்னால் தான் என் பேரனுக்கு இந்த நிலைமை என்று சொல்வதால் காவிரியால் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி ஒவ்வொரு ரூமாக சென்று விஜய் உடன் இருந்த பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து வெண்ணிலா அங்கு வருகிறார். அப்போது காவிரி, வெண்ணிலாவிற்கு நன்றி சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே வெண்ணிலா, நீ சொன்னது போல் நான் செய்து விட்டேன். நீ எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவாயா? என்று கேட்கிறார். அதற்கு வெண்ணிலா, இனி விஜய்- காவேரி கிடையாது. நான் சொன்னது போல் விஜயின் வாழ்க்கை விட்டு போகிறேன். நீ பத்திரமாக விஜய்யை பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். உடனே விஜய், காவிரி என்னுடன் இங்கே இரு என்று சொல்கிறார். ஆனால், காவேரி கேட்காமல் விஜய்யை உதாசீனப்படுத்திவிட்டு செல்கிறார். விஜய்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full