காவிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய், கங்கா சொன்ன விஷயம் - பரபரப்பில் மகாநதி

By subhashini · 15/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, விஜயின் வீட்டிற்கு போவதால் நிறைய பலகாரம் செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து காவிரிக்கு கடுப்பாகிறது. எதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று தன் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். சாரதா ஏதேதோ சொல்லி சமாளித்தார். இன்னொரு பக்கம் விஜய், காவேரி வீட்டிற்கு வருவதால் யாரையும் சமைக்க விடாமல் தன் கையாலே விதவிதமாக சமைத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்து தாத்தாவிற்கு சந்தோசம்.

சித்தப்பா அன்பரசு, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. காவிரியால் விஜயின் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது என்றார். தாத்தா, காவிரி இருந்தால் தான் விஜய் சந்தோஷமாக இருப்பான். அவன் விருப்பப்படி நடக்கட்டும். எதுவும் சொல்ல வேண்டாம் என்றார். அதற்குப்பின் சாரதா- காவிரி இருவரும் விஜயின் வீட்டிற்கு வந்தார்கள். விஜய் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். பின் விஜய் தன்னுடைய தாத்தா சித்தி, சித்தப்பாவை எல்லாம் காவிரிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மகாநதி:

அம்மு தன்னுடைய வீட்டை சுற்றி காண்பிப்பதற்காக காவிரி அழைத்து சென்றார். பின் அம்மு தங்களுடைய ரூமை பற்றி சொல்கிறார். காவிரியும் சந்தோஷப்பட்டார். அங்கு ரூமில் காவிரியின் உடைய பழைய பொருட்களை எல்லாம் அம்மு காண்பித்தார். அதை பார்த்து காவிரிக்கு ஞாபகம் வருமா? என்று விஜய் பார்த்தார். ஆனால் காவிரிக்கு எந்த ஞாபகமே வரவில்லை. காவிரி, எதற்காக இந்த பொருளை வைத்திருக்கிறீர்கள் என்றார். விஜய், என் மனைவியின் ஞாபகம் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று எமோஷனலாக பேசி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் சாரதாவிடம் விஜயின் தாத்தா தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். சாரதாவும் பழைய விஷயத்தை மறந்துவிடலாம் என்று சொன்னார். பின் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சந்தோஷமாக சாப்பிட்டார்கள். விஜய், காவிரிக்கு பிடித்த பலகாரத்தை செய்து கொடுத்தார். இருந்தும் காவிரிக்கு பழைய ஞாபகங்கள் எதுவுமே வரவில்லை. சித்தப்பா, உண்மையை சொல்லாமல் காவிரியின் குடும்பத்தை முறைத்துக் கொண்டு இருந்தார்.

https://www.youtube.com/watch?v=t6rB_iBl5T0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவிரியின் பிறந்தநாளை சாரதா வீட்டில் எல்லோருமே சூப்பராக கொண்டாடுகிறார்கள். விஜய்- அம்மு இருவருமே காவிரி வீட்டிற்கு வருகிறார்கள். காவிரி சந்தோசமாக தன்னுடைய பிறந்தநாளை தன் குடும்பத்துடன் கொண்டாடுகிறார். அப்போது கங்கா, உன் ஸ்டூடன்டின் அப்பா ரொம்ப ஹான்ஸமாக இருக்கிறார். நீ அவரையே காதலித்து கல்யாணம் செய்து கொள் என்று சொல்கிறார். காவிரி திட்டுகிறார். இருந்தாலும் காவிரி மனதிற்குள் விஜய் அழகாக இருப்பதை ரசிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full