காவிரிக்கு குழந்தை பிறந்தாச்சு, கோபத்தில் விஜய்யின் பாட்டி செய்த வேலை - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி இருவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தார்கள். அப்போது விஜய் கண் விழித்து காவிரியை பார்த்தார். காவிரியும் கண்விழ்த்தார். இருவரும் தங்கள் கைகளை பிடித்து தங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்பட்டார்கள். பின் இருவரையும் ஐசியூவிற்கு அழைத்து சென்றார்கள். இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள்.
அப்போது போலீஸ், விஜய்- காவிரி இருவருக்கும் நடந்த விபத்தை பற்றி சொன்னார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். விஜயின் பாட்டி, தாத்தா இருவரும் ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பினார்கள். டாக்டர், எங்களால் எதுவும் சொல்ல முடியாது. இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
மகாநதி:
விஜய், காவிரி இருவரின் நிலைமையும் ரொம்ப மோசமாக இருப்பதால் வீட்டில் உள்ள எல்லோரும் ரொம்பவே பயப்பட்டார்கள். அந்த சமயம் அந்த போலீஸ் விபத்தை பற்றி விசாரித்தார்கள். அப்போது நிவின், ராகவ் தான் இதை செய்து இருப்பான் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் புகார் கொடுக்கிறேன் என்று போலீஸ் ஸ்டேஷன் போனார். இன்னொரு பக்கம் டாக்டர், காவிரி நிலைமை மோசமாக இருப்பதால் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றார்கள். பின் காவேரிக்கு ஆப்ரேஷனும் நடக்கிறது. வீட்டில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவிரிக்கு நல்லபடியாக பெண் குழந்தை பிறந்து விடுகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது பாட்டி தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து விஜய் இனிமேல் இங்கு இருக்க கூடாது. காவிரியுடன் இருந்தால் என் பேரனுக்கு இன்னும் ஆபத்துதான். அவனை வேறு ஒரு ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லலாம் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
விஜய் தாத்தா முதலில் மறுத்தாலும் பாட்டி சொல்வதை ஏற்றுக்கொண்டு விஜய்யை அந்த ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஒரு ஹாஸ்பிடலுக்கு மாற்றி விடுகிறார்கள். ஆனால், இந்த விஷயம் காவிரி குடும்பத்திற்கு தெரியாது. பின் சாரதா, காவிரியிடம் பேசுகிறார். குழந்தையை வைத்து சாரதா எமோஷனலாக பேசியும் காவிரி கண் விழிக்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது