மும்முரமாக வளைகாப்பு விழா ஏற்பாடு செய்யும் விஜய், சமர்த்தியாக காய் நகர்த்தும் காவிரி - மகாநதி

By subhashini · 6/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்து மலர், எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் சித்தப்பா, கிருஷ்ணா வேலையே செய்யவில்லை. நடித்துக் கொண்டிருந்தார். அவன் உன்னை ஏமாற்ற போகிறான் என்றெல்லாம் தவறாக சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது வந்த கிருஷ்ணா, அவர் பார்த்த வேலை எல்லாம் விஜய் இடம் சொல்லிவிட்டு சென்றார். பின் விஜய், கிருஷ்ணாவை வேலை செய்யவிடாமல் சித்தப்பா தடுத்ததை வீடியோ ஆதாரத்துடன் காண்பிப்பதால் சித்தப்பா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.

சித்தப்பா கையும் களவுமாக மாட்டியதால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றார். விஜய், இனிமேல் நீங்கள் எந்த வேலையும் செய்ய தேவையில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்கள் என்று வார்னிங் கொடுத்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் விஜய்- காவிரி இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்தார்கள். இன்னொரு பக்கம் பாட்டிக்கு மருந்து மாத்திரை எல்லாம் சிந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கங்கா மயங்கி கீழே விழப்போனார்.

மகாநதி:

உடனே சிந்து அவரை பிடித்து உட்கார வைத்து செக் செய்தார். அப்போது கங்கா சரியாக சாப்பிடாமல் இருந்ததால் பிபி லோவாகி இருப்பது தெரிய வருகிறது. அதற்குப்பின் சிந்து, கங்காவிற்கு முதலுதவி செய்து சாப்பாடு கொண்டு வந்து தந்தார். அதற்கு பின் கங்கா உடல்நிலை சரியாக இருந்தது. இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவரும் வளைகாப்பு நடக்க இருப்பதால் இருவருக்கும் துணி எடுக்க கடைக்கு சென்று இருந்தார்கள். அங்கு பார்த்து பார்த்து ஒவ்வொரு துணியையும் காவிரி செலக்ட் செய்து இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜய்- காவிரி இருவரும் வீட்டில் உள்ள எல்லோருக்குமே துணி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். காவிரி தன்னுடைய வீட்டில் உள்ள எல்லோருக்கும் துணி கொடுத்து விட்டு முத்து மலர் குடும்பத்திற்கும் துணி எடுத்திருக்கும் விஷயத்தை தன் அம்மாவிடம் சொல்கிறார். முதலில் கோவப்பட்ட சாரதா, பிறகு கொடுப்பதற்கு ஒத்து கொள்கிறார். பின் துணிகளை எல்லாம் முத்துமலர் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு வளைகாப்பிற்கு கூப்பிடுகிறார் காவிரி. அதற்குப்பின் விஜய் வளைகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் காவிரி, நம் கஸ்டமர்ஸ் எல்லோரையும் கூப்பிடலாம். இது கொஞ்சம் சுயநலமாக இருந்தாலும் அவர்கள் நமக்காக டைம் கொடுத்ததற்கு நம்முடைய விசுவாசமாக இருக்கட்டும். அவர்களுடன் நமக்கு நல்ல உறவு ஏற்படும் என்று சொல்கிறார். பின் காவிரி, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி அழைக்கிறார். இதை பார்த்து கிருஷ்ணாவுமே ஃபீல் பண்ணுகிறார். பின் கிருஷ்ணா, காவிரியின் நல்ல மனதை பாராட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full