பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜயை ரசிக்கும் காவிரி, எமோஷனலான சாரதா - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி- சாரதா இருவருமே விஜயின் வீட்டில் உள்ள எல்லோரும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அப்போது விஜய், நானே உங்களை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்றார். அதற்கு பின் காரில் வரும்போது விஜய், காவிரியின் உடைய பழைய நினைவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுப்படுத்தி பார்த்தார். ஆனால், காவிரிக்கு எந்த ஞாபகமே வரவில்லை. விஜய், எப்படியாவது உனக்கு பழைய ஞாபகத்தை கொண்டு வருவேன் என்று தன் மனதிற்குள் சென்றார். இது ஒரு பக்கம் விஜயின் சித்தப்பா அன்பரசனின் காரின் மீது ராகவின் கார் மோதும் படி வந்து நிற்கிறது.
ராகவ், நான் ஐந்து வருஷத்துக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். விஜய், காவிரியை பழி வாங்காமல் விடமாட்டேன் என்றெல்லாம் சொன்னார். சித்தப்பா, காவிரிக்கு பழைய நினைவுகள் எதுவும் இல்லை என்று நடந்தது எல்லாம் சொன்னார். இருந்தாலும் ராகவ் அவர்கள் இருவரையும் பழிவாங்கியே தீருவேன் என்றார். காவிரியின் பிறந்தநாளுக்காக கங்கா -யமுனா இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். தன் சகோதரிகளை பார்த்தவுடன் காவேரி ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் காவிரி பள்ளிக்கு கிளம்பி செல்கிறார். அங்கு விஜய் காத்துக் கொண்டிருந்தார்.
மகாநதி:
விஜய், காவிரிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பரிசு கொடுத்தார். அம்மு சொன்னதால் காவிரி பரிசை வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் விஜய், கங்கா- யமுனா இருவரையும் சந்தித்து பேசி இருந்தார். அதற்குப் பிறகு காவிரியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் வீட்டில் தடபுடலாக நடக்கிறது. எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து விஜய், அம்மு இருவரும் காவிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அம்மு, என்னுடைய அம்மாவிற்கும் இன்று தான் பிறந்தநாள். என் அம்மாவின் பிறந்த நாளை நான் கொண்டாடியது இல்லை என்றார். உடனே காவிரி, அம்முவை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிறப்பாக காவிரி பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். காவிரி. விஜய்க்கு கேக் கொடுக்கிறார். விஜயும் சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார். அதற்குப்பின் யாழினி- அம்மு இருவரும் ஜாலியாக விளையாடுகிறார்கள். அதை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகிறார்கள். அப்போது கங்கா, உன் ஸ்டுடண்ஸ் அப்பா ரொம்ப ஹான்சமாக இருக்கிறார். நீயே காதலித்து கல்யாணம் செய்து கொள் என்கிறார். காவிரி, தன் அக்காவை திட்டினாலும் மனதுக்குள் விஜயை ரசிக்கிறார். பின் அம்மு காவிரியின் வீட்டிலேயே தூங்குகிறேன் என்று கேட்டதால் விஜயை ஒத்துக் கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் காவிரி முதன்முதலாக தன்னுடைய மகளுடன் சேர்ந்து தூங்குகிறார். இதை பார்த்து சாரதாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மறுநாள் காலையில் கங்கா- யமுனா இருவரும் தங்களுடைய ஊருக்கு கிளம்புகிறார்கள். அப்போது வந்த விஜய், அம்முவை ஸ்கூலுக்கு ரெடி பண்ண அழைத்து செல்கிறார். சாரதா, நானே பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். விஜய் சந்தோசப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது