முத்துமலர் மகன் கொடுத்த கோர்ட் ஆர்டர், ஷாக்கில் உறைந்த காவிரி குடும்பம் - பரபரப்பில் மகாநதி

By subhashini · 19/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர் குடும்பம் கேட்கவில்லை. எங்கள் உரிமையை விட்டு தர முடியாது என்று சொன்னார்கள். இதை கேட்ட சாரதா, கோபப்பட்டு முத்து மலரிடம் சண்டை போட்டார். பின் எல்லோரையும் வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிக்கொண்டார். முத்து மலர், நம்ம பிரச்சனை செய்ய வேண்டாம். ஆனால், நம்முடைய உரிமையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றார். விஜய், அவர்கள் குளிரில் வெளியே கஷ்டப்பட்டார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்கிறார். சாரதா கோபப்பட்டார்.

விஜய், சாரதாவிடம் பேசி முத்து மலர் குடும்பத்தை உள்ளே தங்க வைக்க சம்மதம் வாங்கி கொண்டார். அதற்குப்பின் முத்துமலர் குடும்பமும் உள்ளே வந்து தங்கிக் கொள்கிறது. விஜய் அவர்களுக்கு போர்வை எல்லாம் கொடுத்தார். இது எல்லாம் பார்த்து சாரதாவிற்கு கோபம் அதிகமானது. அதற்குப்பின் முத்து மலரின் மகளால் பாத்ரூம் கூட போக முடியாமல் கஷ்டப்பட்டார். அந்த சமயம் பார்த்து சந்தானத்தின் அம்மா வந்தார். அப்போது முத்துமலர், நானும் தான் உங்கள் மருமகள். இவர்கள் உங்கள் பேரப்பிள்ளை இல்லையா? என்று எமோஷனலாக பேச, சந்தானத்தின் அம்மாவும் மனம் இறங்கினார்.

மகாநதி:

இதையெல்லாம் பார்த்து சாரதாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. பின் சாரதா, நீங்களும் ஏமாற்றி விட்டீர்கள். உங்கள் மகனும் ஏமாந்து விட்டார்கள். சிந்து- கிருஷ்ணா என்று நதிகள் பெயரையே வைத்திருக்கிறார் என்றார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருக்குமே கோபம் அதிகமானது. பின் காவிரி, தன்னுடைய தந்தை செய்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது விஜய், இந்த நேரத்தில் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணலாமா? இவர்கள் செய்ய விடுவார்களா? என்று கேட்டார். அதற்கு காவிரி, என்ன ஆனாலும் பண்ணி தான் ஆகணும் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துமலர் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வேண்டுமென்று யமுனா, தண்ணியை தட்டி விடுகிறார். இதனால் கோபத்தில் முத்தமிழரின் மகன் சண்டை போடுகிறார். நிவினுக்கு உண்மை தெரியவில்லை. இருந்தாலும் யமுனாவிற்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்காக முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொல்கிறார்கள். ஆனால் ,அவர்கள் முடியாது என்று மறுக்கிறார்கள். உடனே முத்து மலரின் மகன், நீங்கள் இந்த வீட்டை விற்கை ஏற்பாடு செய்யும் விஷயம் எனக்கு தெரியும். நீங்கள் இந்த வீட்டை விற்க முடியாது என்று கோர்ட் நோட்டீசை காண்பிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து காவிரி குடும்பத்தில் எல்லோருமே சாக் ஆகிறார்கள். கோபத்தில் சாரதா, முத்துமலர் குடும்பத்தை வெளியே தள்ளி கேட் போடுகிறார். விஜய்,இங்கு இருந்தால் பிரச்சனை அதிகமாக தான் ஆகும். பணம் வேணும் என்றால் நான் உங்களுக்கு தருகிறேன் என்கிறார். அதற்கு கங்கா- யமுனா, எங்களுக்கு பணம் தேவைதான். ஆனால், இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வேண்டாம். பிரச்சனை முடிந்த பிறகு வீட்டை விற்று பணம் வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். அதற்குப்பின் எல்லோருமே சென்னை வருகிறார்கள். சாரதா, சந்தானம் செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full