தன் வீட்டிற்காக பசுபதியிடம் போராடும் காவிரி, கொந்தளிக்கும் விஜய் - பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கோபத்தில் குமரன், இங்கேயும் பசுபதி வந்தான். பெரிய பிரச்சினையாகிவிட்டது என்று சொன்னார். பின் விஜய், காவிரி எதற்காக இப்படி செய்தார். எனக்கு என்ன செய்வது இப்படி புரியவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டார். குமரன், உண்மையை சொல்ல முடியாமல் தவித்தார். அதற்குப்பின் பசுபதி வீட்டிற்கு சென்ற விஜய், காவிரியை மிரட்டியதற்காக சண்டை போட்டார். பசுபதியுமே பதிலுக்கு பதில் கொடுத்தார். கடைசியில் கோவப்பட்ட விஜய், பசுபதியின் கையை முறுக்கி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.
பசுபதியால் காவேரி குடும்பத்திற்கு பிரச்சினை வரும் என்று அவர்கள் வீட்டிற்கு வெளியேயே விஜய் காவல் காத்துக் கொண்டிருந்தார். அப்போது காவிரியை பார்த்து விஜய், என்னதான் பிரச்சனை? எதற்காக என்னை வேண்டாம் என்று சொல்கிறாய்? உண்மையை சொல்ல வந்தும் ஏன் தடுத்தாய்? என்று கேட்டார். ஆனால், காவிரியால் உண்மையை சொல்ல முடியாமல் பசுபதியால் உங்களுக்கு பிரச்சனை வேண்டாம். அதனால் தான் நான் ஒதுங்கி இருக்கிறேன் என்று சொன்னார். பின் காவிரியின் வயிற்றில் கையை வைத்து தன் குழந்தையிடம் கொஞ்சினார் விஜய்.
மகாநதி:
அதற்குப்பின் விஜய், நீ சீக்கிரம் என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று நம்புகிறேன் என்றார். காவிரியால் விஜயின் அன்பை விலக்கி வைக்க முடியவில்லை. அதற்குப்பின் காவேரி அம்மா, சொந்தக்காரர் ஒருவரின் விசேஷத்திற்கு கொடைக்கானல் சென்று இருந்தார். அப்போது கங்காவிற்கு ஃபோன் செய்த அவருடைய அம்மா, பசுபதி நம்முடைய வீட்டை அவனுடையது என்று சொல்லி பிரச்சனை செய்து கொண்டிருக்கிறான் என்று புலம்பி அழுதார். உடனே குமரன், காவேரி, கங்கா, பாட்டி எல்லோருமே கொடைக்கானல் கிளம்பினார்கள்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பசுபதி, தங்களுடைய வீட்டை அபகரிக்கிறான் என்ற விஷயம் தெரிந்து ராகினி, நிவினிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பசுபதி, சந்தானத்தின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அராஜகம் செய்து கொண்டிருந்தார். உன் புருஷன் 10 லட்சம் ரூபாய் கடன் தரணும். அதனால் இந்த வீடு என்னுடையது என்றார். காவிரி அம்மா, என்ன செய்வது என்று புரியாமல் அழுது கொண்டிருந்தார். பின் காவேரி அங்கு வந்து விட்டார். அப்போது பசுபதி, சந்தானம் கையெழுத்து போட்ட டாக்குமெண்ட்டை கொடுத்தார். கோபத்தில் காவிரி டாக்குமெண்ட்டை தூக்கிப்போட்டார். பின் குமரன், காவேரி எல்லோருமே சேர்ந்து பசுபதியும் அவருடைய ஆட்களையும் அடிக்கிறார்கள். அந்த இடத்திற்கு போலீஸ் வந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ், டாக்குமெண்டில் உங்கள் கணவர் கையெழுத்து போட்டு பணம் வாங்கியது போல் தான் இருக்கிறது. நீங்கள் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசிக் கொள்ளுங்கள். இங்கு இருந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாதீர்கள். ஒழுங்கு மரியாதையாக இரண்டு பேருமே கிளம்புங்கள் என்று சொல்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் காவிரி அமைதியாக விடுகிறார். பசுபதி
அந்த வீட்டை எழுதி வாங்கியே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் நிவினை சந்தித்து விஜய் பேசுகிறார். அப்போது விஜய், எதற்காக காவிரி இப்படி முடிவு எடுத்தால் என்று தெரியவில்லை.
சீரியல் ட்ராக்:
என் பாட்டி சொன்னதால் இப்படி செய்கிறாளா? என்ன காரணம் என்று யோசிக்கவே முடியவில்லை. அவள் எதற்காக இப்படி செய்தால் என்று தெரிந்தால் நான் அதை சரி செய்ய செய்வேன். இன்னும் ஒரு நாள் தான் பார்ப்பேன். காவிரி வரவில்லை என்றால் நான் அவரை என்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வேன் என்று சொல்கிறார். பின் நிவின், காவிரி இங்கு இல்லை. கொடைக்கானல் சென்று இருக்கிறார். பசுபதி அவர்களுடைய வீட்டை தரமாட்டேன் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். கோர்ட் கேஸ் என்று அவர்களை அலையவிட தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று சொல்கிறார். இதைக்கேட்டு விஜய்க்கு பயங்கர கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.