காவிரி குழந்தையை நினைத்து கவலைப்படும் விஜய், சாரதா செய்த வேலையால் கொந்தளிக்கும் கங்கா - மகாநதி

By subhashini · 14/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரிக்கு தண்ணி கொடுத்து சமாதானம் செய்தார். அதற்குப்பின் இதெல்லாம் பசுபதி தான் செய்தார் என்று விஜய்க்கு தெரிந்தது. இருந்தாலும் அதை காவிரியிடம் சொல்லவில்லை. அதற்குப் பின் குமரன், வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்தார்.அப்போது குமரன், மலேசியாவில் துணி தைப்பதற்கான ஆர்டர் வந்திருக்கிறது. இரண்டு மூன்று மாதம் அங்கேயே தங்கி செய்ய வேண்டும். நான் மலேசியா போகப்போகிறேன். குழந்தை பிறக்கப் போகிறது பணம் வேண்டும. அதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன் என்றார்.

இதைக்கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். கங்கா, வேண்டாமென்று சொல்லியும் குமரன் கேட்கவில்லை. அதற்குப்பின் விஜய், நிவின் இருவருமே குமரனிடம் விசாரித்தார்கள். அப்போது குமரன், நல்ல வாய்ப்பை கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்ளணும். நான் போயிட்டு வருகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். நிவின்- விஜய் இருவருமே குமரனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார்கள். பின் பழைய நினைவுகளை எல்லாம் மூணு பேருமே நினைத்து பார்த்தார்கள்.

மகாநதி

கங்கா, நீங்கள் மலேசியெல்லாம் ஒன்னும் போக வேண்டாம். நல்ல தகப்பனாக இருப்பதற்கு முயற்சி செய்கிறீர்களா? என்று வழக்கம் போல குமரனை ஏளனமாக பேசி இருந்தார். உடனே கோபப்பட்ட குமரன், நான் நல்ல கணவன் இல்லை என்று சொல்லிவிட்டாய். என்னுடைய குழந்தைக்கு தேவையானதை எல்லாம் நான் செய்வேன். நான் கண்டிப்பாக போவேன் என்று சொல்லி விட்டார். மறுநாள் குமரன் மலேசியா கிளம்புவதற்கு தயாராக இருந்தார். ஆனால், கங்கா கோபத்தில் இருந்தார்.

நேற்று எபிசோட்:

வீட்டில் உள்ள எல்லோருமே குமரனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்கள். அதற்குப்பின் குமரன் தன் பேச்சை கேட்காமல் போனதை நினைத்து கங்கா வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு ஸ்கேன் செய்ய போவதால் கங்கா ஆர்வமாகவும் சந்தோஷமாக இருந்தார். விஜய், என்ன நடக்குமோ? குழந்தைக்கு பிரச்சனை இருக்குமோ? என்று கவலையில் இருந்தார். பின் ஒரு வழியாக கங்காவை சமாதானம் செய்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போனார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் கங்கா-காவிரி இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது
ஒருவர் பின் ஒருவராக ஸ்கேன் செய்கிறார்கள். பிறகு டாக்டர், கங்கா- காவேரி இருவரின் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். இதனால் இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். விஜய், சாரதாவும் காவிரியின் குழந்தை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். அப்போது விஜய், உனக்கு அம்மை நோய் வந்தபோது குழந்தைக்கு பிரச்சனை என்று சொன்னார்கள். அதனால் தான் பயந்துவிட்டோம் என்கிறார். இதனால் சாரதா, நேர்த்திக்கடன் இருக்கு. கோயிலுக்கு போகலாம் என்று சொல்கிறார். இதை எல்லாம் பார்த்து கங்காவிற்கு பயங்கர கோபம் வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full