பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறும் விஜய், வலியில் துடிக்கும் காவிரி - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 24/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்யின் கஸ்டமர் எல்லோருமே பேட்டியில் விஜய் கம்பெனியை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார்ர்கள். இதை டிவியில் பார்த்த தாத்தா, பாட்டி இருவரும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள். பின் பாட்டி, விஜய் இடம் பேசி பிரச்சினையை பார்க்க சொல்லுங்க என்றெல்லாம் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் நர்மதா, முத்துமலர் குடும்பம் இருக்கும் இடத்திற்கு சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பசுபதி ஏமாற்றிய வேலை எல்லாம் நர்மதா சொன்னார். இதைக் கேட்டு கிருஷ்ணா, சிந்து எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.

விஜய், காவிரி இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது விஜயின் பாட்டி, எங்கள் பேச்சை கேட்டாயா? காவிரி குடும்பத்து பிரச்சனையை தலையில் வைத்துக்கொண்டு ஆபீஸ் வேலையை கவனிக்கவில்லை. அதனால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்கு பார். எப்போதுதான் நாங்கள் சொல்வதை கேட்பாய் என்றெல்லாம் காவிரி குடும்பத்தை மோசமாக பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த காவிரி, என்னுடைய குடும்பத்தை அப்படியே விட்டுவிட்டு வர முடியாது. என்னுடைய குடும்பம் இங்கு வருவதற்கு காரணம் விஜய் தான். அவர்தான் பேசி அழைத்து வந்தார். நான் ஒன்னும் கூப்பிடவில்லை.

மகாநதி:

அதேபோல் அவர் பிரச்சனையில் இருப்பது எனக்கு தெரியும். தயவுசெய்து எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என்று அங்கிருந்து சென்று விட்டார். பின் விஜய், தன்னுடைய தாத்தா பாட்டியிடம் எடுத்து சொல்லி புரிய வைத்தார். இது எல்லாம் கங்கா கேட்டு விட்டார். பின் இதைப்பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி கங்கா வருத்தப்பட்டார். சாரதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
அதற்குப்பின் விஜய் தலை வலிக்கிறது என்று சொல்வதால் காவேரி காபி போட்டு கொடுத்து தலையை பிடித்து விட்டார். காவேரி, என்னால் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை. சீக்கிரமாகவே சரி செய்து விடலாம் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கங்கா, சாரதா இருவருமே தங்களுடைய வீட்டிற்கு கிளம்புவதாக காவிரியிடம் சொல்கிறார்கள். காவிரி வேண்டாம் என்று தடுக்கிறார். விஜய், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்தார். கடைசியில் காவிரி, தன்னுடைய அம்மாவை சமாதானம் செய்து அங்கேயே தங்க வைக்கிறார். அதற்கு பின் விஜய்யின் பாட்டி ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வருகிறார். அப்போது சாரதா, உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். உடனே கோபப்பட்ட விஜயின் பாட்டி, உங்களால் தான் எனக்கு இந்த பிரச்சனை. என் பேரன் நிம்மதி இல்லாமல் திரிகிறான்.

சீரியல் ட்ராக்:

அவன் ஆபீசிலும் கவனம் வைக்க மாட்டான். நீங்கள் இங்கிருந்து கொண்டு ஏன் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதனால் சாரதாவிற்கு ரொம்பவே கஷ்டமாகிறது.
இன்னொரு பக்கம் விஜய், காவிரி இருவரும் ஆபிஸ் பிரச்சனை எப்படி சரி செய்வது என்று தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் விஜய், கஸ்டமர்ஸ் எல்லாம் சந்தித்து பேச வருகிறார். ஆனால், யாருமே விஜய் சொல்வதை கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் கோபப்பட்டு காவேரி, அமைதியாக சொல்லி கத்துகிறார். உடனே அவருக்கு வயிறு வலி ஏற்பட்டு விடுகிறது. விஜய் பதறிப் போகிறார் இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full