பசுபதியை வெறுப்பேற்றும் காவிரி, விஜயை தேடி அலையும் போலீஸ் - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 25/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் காவிரி, அப்பளம் அனுப்புவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்து குமரன், எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொன்னார். அதற்க்கு பின் குமரன், அப்பளத்தை எல்லாம் ரெடி செய்து கொண்டிருக்க, அதை பார்த்த குமரனின் அம்மா, உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை. உன்னை இந்த வீட்டில் வேலைக்காரனாக தான் பார்க்கிறார்கள் என்று வழக்கம்போல காவிரியின் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினார். இதையெல்லாம் கேட்ட காவிரியின் அம்மா எதுவும் பேசாமல் மனம் உடைந்து இருந்தார். பின் கங்காவிடம் அவர், நீயும் குமரனும் இங்கே இருங்கள். நாங்கள் தனியாக சென்று விடுகிறோம் என்று சொன்னார்.

விஜய்க்கு போன் செய்த தாத்தா, ஒருவேளை வெண்ணிலாவிற்கு ஏதாவது ஆகிவிட்டால் இந்த கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்காகிவிடும். லாயர் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னார். நீ எதற்கும் கவனமாக இரு என்று சொன்னார். அதற்கு விஜய், சரி நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். இதை எல்லாம் கேட்டு காவிரி ரொம்ப பயந்தார். இன்னொரு பக்கம் குமரன், தன் அம்மாவை அழைத்துக் கொண்டு ரெஸ்டாரண்ட் சென்றிருந்தார். அங்கு காவிரி குடும்பத்தின் நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.

மகாநதி சீரியல்:

அதற்கு குமரன் அம்மா, நான் இனிமேல் அவர்களை பற்றி பேச மாட்டேன் என்றார். இன்னொரு பக்கம் கங்கா, காவிரி நிலைமையை நினைத்து வருத்தப்பட்டு அவருக்கு போன் செய்து பேசி இருந்தார். காவிரி, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நன்றாகிவிடும். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். அதற்குப்பின் காவிரி மொபைலில் அம்மா போட்டிருந்தால் குழந்தைக்கு பிரச்சனையாகுமா? என்பதை பற்றி வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு அம்மை போட்டு இருந்தால் குழந்தை பிறந்தவுடன் நோய் வாய் பட்டு இறந்து விடும் என்று சொல்லப்பட்டது. இதை பார்த்தவுடன் காவேரி ரொம்ப எமோஷனாக கதறி அழுதார். விஜய் ஆறுதல் சொல்லியுமே அவர் கேட்கவில்லை.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் விஜய் எவ்வளவோ ஆறுதல் சொல்லியுமே காவிரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதையே நினைத்து புலம்பி கொண்டிருந்தார். ஏதேதோ செய்து விஜய், காவேரியை சமாதானம் செய்து விட்டார். அதற்குப் பின் விஜய், காவிரியை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது வந்த கங்காவின் மாமியார், யாரோ அங்கிருக்கிறார் என்று கத்தினார். உடனே விஜய் பதறி அடித்துக் கொண்டு உள்ளே போய் நடந்ததை காவிரியிடம் சொன்னார். பின் யாருக்கும் தெரியாமல் விஜய் ஒளிந்து கொண்டார். இன்னொரு பக்கம் கங்காவின் மாமியார், கத்தியதில் காவிரி அம்மா, வெளிய வந்து விசாரித்தார்.

சீரியல் ட்ராக்:

இங்கு இருந்த யாரோ ஒருவர் காவிரி ரூமுக்கு சென்று விட்டார் என்று புலம்பி இருந்தார். உடனே காவிரியின் அம்மா ரூம் முழுக்க தேடினார். காவிரி, இங்கு யாருமே இல்லை. நீங்கள் பேய் பார்த்து பயந்து இருப்பீர்கள் என்று கங்காவின் மாமியாரை பயமுறுத்துகிறார். எல்லோரும் சென்றதற்குப் பின் விஜய் வந்தார். மறுநாள் காலையில் காவிரியின் முகத்தில் அம்மை குறைந்து இருந்தது. இதை பார்த்த அவருடைய அம்மா, தண்ணி ஊற்றி விடலாம் என்றார். அதற்குப்பின் காவேரி- விஜய் இருவருமே ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=n4OTiuWlOrk

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் ஹாஸ்பிடல் செக் அப் முடித்து விஜய், காவிரி இருவருமே காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். விஜய் காரில் வருவதை பார்த்த போலீஸ் பின் தொடர்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில் வண்டியை நிறுத்தி போலீஸ் தேடுகிறார்கள். ஆனால், காரில் விஜய் இல்லை.
காவிரி, விஜய் எங்கே என்று எனக்கு தெரியாது என்கிறார். அதோடு போலீசுடன் பசுபதியும் வந்திருக்கிறார்.
அப்போது காவிரி, குமரன்- நிவின்- விஜய் மூணு பேருமே உன்னை தூக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். மூணு சூப்பர் ஹீரோக்கள் வரப்போகிறார்கள். தயாராக இரு என்று பசு என்று வண்டியை அவர் மீது ஏற்றுவது போல ஓட்டிக்கொண்டு செல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full