திருமணம் நின்று போனதால் கொந்தளிக்கும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அம்மு, அப்பா வேணாம் என்று சொன்னதால்தான் பள்ளிக்கு வரவில்லை என்று உண்மையை சொன்னார். காவிரி, எதற்காக இப்படி செய்கிறீர்கள்? நான் டீச்சர் என்ற முறையில் தான் கேட்கிறேன் என்றார். விஜய், நான் அம்முவை வேறு ஸ்கூலில் சேர்க்கப் போகிறேன். நீங்கள் அம்முவைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் பட தேவையில்லை என்றார். விஜய் பேசியது காவிரிக்கு கஷ்டமாக இருக்கிறது. அதற்குப்பின் காவிரியை திருமணம் செய்து கொள்ள போகும் கார்த்திக், திருமண ஏற்பாடுகளை பற்றி எல்லாம் சொன்னார்.
காவிரி சந்தோஷமாக திருமணத்தை பற்றி பேசுகிறார். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த காவிரி, விஜய் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். இதை கேட்டு சாரதா-கங்கா ஷாக் ஆனார்கள். கங்கா, அவர் என்ன வேனாலும் செய்து கொள்ளட்டும். நீ எதற்கு கவலைப்படுகிறாய் உன்னுடைய வேலையை பார் என்றார். இருந்தாலும் காவிரிக்கு கஷ்டமாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் விஜய், காவிரியுடன் இருக்கும் புகைப்படத்தை எல்லாம் பார்த்து வேதனைப்பட்டார். இதை கவனித்த அம்மு, விஜய் இல்லாத நேரம் பார்த்து புகைப்படத்தை எடுக்கப் போனார். அதற்குள் வந்த விஜய், அம்முவை கடுமையாக திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார்.
மகாநதி:
விஜய் ரொம்ப கடுமையாக நடந்து கொண்டதால் அம்மு அழுது கொண்டே இருந்தார். தாத்தா, ராதா பாட்டி எல்லோருமே சமாதானம் செய்தும் அம்மு கேட்கவில்லை. பின் அம்மு, சாரதாவிற்கு ஃபோன் செய்து பேசி இருந்தார். அப்போது அம்மு, என்னை பார்க்க வர மாட்டீர்களா? என்னை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு சாரதாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. அதற்குப்பின் தாத்தா, விஜய் இடம் அம்முவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். விஜய், நான் கோபத்தில் அப்படி பேசி இருக்கக் கூடாது.
சீரியல் ட்ராக்:
அம்முவின் மனதில் காவேரி ரொம்பவே நெருக்கமாகிவிட்டாள். அம்மு அவளுடனே இருக்க நினைக்கிறாள் என்றார். அந்த சமயம் பார்த்து சாரதா, கங்கா இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். விஜய், எதற்காக வந்தீர்கள்? இது தெரிந்தாலும் காவிரி என்னை தான் குறை சொல்லுவாள் என்றார். சாரதா, நான் அம்முவை பார்க்கவும் அவளை என்னுடன் அழைத்துப் போகும் தான் வந்தேன் என்றார். விஜய் முடியாது என்று மறுத்தார். ஒரு கட்டத்தில் சாரதா கெஞ்சி கேட்டதால் விஜய் ஒத்துக் கொண்டார்.
https://www.youtube.com/watch?v=2u3Hi2fG1Rg
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சாரதா, நிவின் இருவருமே காவிரி பார்க்க வந்த மாப்பிள்ளை கார்த்திக் வீட்டிற்கு சென்று காவிரியை பற்றி ஒன்றுக்கு இரண்டாக தவறாக சொல்கிறார்கள். இதனால் கார்த்திக் திருமணம் வேண்டாம் என்று காவிரியிடம் சொல்லி விடுகிறார். தன்னுடைய திருமணம் நின்றதுக்கு காரணம் விஜய் தான் என்று தவறாக புரிந்து கொண்ட காவிரி கோபப்படுகிறார். விஜய்யையும் திட்டுகிறார். ஆனால், திருமணம் நின்ற சந்தோஷத்தில் விஜய் இருக்கிறார்