கல்யாணியின் சகுனி வேலையால் குழந்தையை விட்டு பிரிந்த காவிரி, விஜய் நிலைமை என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரிக்கு அவருடைய பழைய ஞாபகம் தான் இருக்கிறது என்று சொன்னார்கள். இதை கேட்டு சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது. விஜய், குழந்தை பற்றிய ஞாபகம் எதுவுமே காவிரிக்கு இல்லை. இதை அறிந்த விஜயின் சித்தி, கல்யானி இடம் சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று கல்யாணி, விஜய்- காவிரியை பிரிக்க திட்டம் போட்டார்.
காவிரியை பார்ப்பதற்கு விஜய்யின் பாட்டி கல்யாணி, தாத்தா இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்திந்தார்கள். சாரதா, காவிரிக்கு ஞாபகம் எதுவும் வரவில்லை என்றார். அதற்குப்பின் வீட்டில் சாரதா குடும்பத்தை அழைத்த கல்யாணி, விஜயின் நிலமை ரொம்ப மோசமாக இருக்கிறது. அவன் கோமாவில் இருக்கிறான். வென்டிலேட்டர் எடுத்து விட்டால் அவன் உயிரோடு இருக்க மாட்டான். அந்த நிலைமையில் இருக்கிறான். காவிரிக்கும் ஞாபகம் எதுவும் இல்லை. காவிரியை நீங்கள் ஊருக்கே அழைத்துக் கொண்டு செல்லுங்கள்.
மகாநதி:
குழந்தையை மட்டும் எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்றார். சாரதாவல் எதுவும் பேச முடியவில்லை. பின் கங்கா, அது எல்லாம் வேண்டாம். குழந்தையை நம்முடன் வைத்துக்கொள்ளலாம் என்றார். பின் கல்யாணியிடம் சாரதா, குழந்தையை மட்டும் நாங்கள் அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார். ஆனால், கல்யாணி ஒத்துக் கொள்ளவில்லை. கல்யாணி ஏதேதோ டிராமாவை செய்து குழந்தையை தன்னிடம் வைத்துக் கொள்ள முடிவெடுக்கிறார். சாரதா வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். பின் வீட்டிற்கு காவிரி வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரி, விஜயின் வீட்டிற்கு வந்து இருக்கிறார். விஜய்யின் தாத்தா, பாட்டியை காவிரிக்கு யார் என்று தெரியவில்லை. பின் சாரதா, விஜயின் தாத்தா- பாட்டி தூரத்து உறவினர்கள் என்று சொல்லிவிடுகிறார். பின் கங்காவிற்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த விஷயத்தைப் பற்றி எல்லாம் சொல்கிறார்கள். காவிரிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சாரதாவின் குடும்பம் விஜயின் வீட்டை விட்டு கிளம்புகிறார்கள். தாத்தா, காவிரி கிளம்புவதை நினைத்து ரொம்ப கஷ்டப்படுகிறார். அதற்குப்பின் விஜய் பார்ப்பதற்கு தாத்தா, பாட்டி எல்லோரும் ஹாஸ்பிடல் போகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
விஜய் கண் விழித்தவுடன் காவிரியும் குழந்தையும் பற்றி தான் விசாரிக்கிறார்கள். பாட்டி கல்யாணி உண்மையை சொல்லாமல் காவிரி நன்றாக இருக்கிறார். அப்புறமாக பார்க்கலாம் என்று சமாளித்து விடுகிறார். இன்னொரு பக்கம் காவேரி சென்று கொண்டிருக்கும் போது தன்னுடைய அப்பாவை பற்றியும் சென்னைக்கு வந்ததைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். சாரதாவால் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார்.