சந்தேகப்படும் கங்கா அம்மா,விஜய்க்கு ஏற்பட்ட விபரீதத்தால் வருத்தப்படும் காவிரி - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் விஜய் ஒளிந்து கொள்ள, காவிரி பதறி அடித்துக் கொண்டு எழுந்து, தன் அம்மாவிடமிருந்து சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வெளியே கிளம்புங்கள் என்று சொன்னார். அதற்கு அவர், என்னாச்சு? உடம்பில் வேற ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேட்டார். ஏதேதோ சொல்லி காவிரி சமாளித்து தன் அம்மாவை அனுப்பி விட்டார். அதற்குப்பின் விஜய் ஹாஸ்பிட்டலுக்கு போனார். அங்கு விஜய், காவிரிக்கு அம்மை போட்டிருக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதற்கு டாக்டர், சில அம்மை குழந்தைக்கு பாதிப்பு தராது. ஆனால், சில அம்மையால் குழந்தைக்கு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னவுடன் விஜய் ரொம்பவே ஷாக் ஆனார்.
டாக்டர், அம்மை போட்டால் எல்லோருக்குமே குழந்தையை பாதிக்கும் என்று அர்த்தம் இல்லை. பாசிட்டிவாக தான் நடக்கும். உங்கள் மனைவியை தைரியமாக இருக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார். பின் விஜய், காவிரிக்கு வீடியோ கால் செய்து டாக்டரிடம் பேச வைத்தார். டாக்டருமே காவிரிக்கு அறிவுரை சொன்னார். அதற்குப்பின் விஜய் இருக்கும் ஹாஸ்பிடலில் தான் குமரன், நிவின் இருவருமே பசுபதியை பற்றி விசாரித்தார்கள். அப்பொழுது வெளியே வந்த விஜய், பசுபதியை பத்தி ஏதாவது தெரிந்ததா? என்று கேட்டார். குமரன், எதுவுமே தெரியவில்லை. நீங்கள் வெளியில் வராதீர்கள் என்று சொன்னார்.
மகாநதி சீரியல்:
அதற்கு பின் நிவின், காவிரிக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, அதற்கு விஜய், அந்த விஷயமாக தான் டாக்டரிடம் பேச வந்தேன். குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று காவிரி ரொம்ப பயப்படுகிறாள் என்று சொல்லி வேதனைப்பட்டார். உடனே நிவின், விஜய்க்கு ஆறுதல் சொல்லி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த விஜயிடம் ஓனர் மாமி, நீங்கள் காவிரி இருக்கும் ரூமில் வேப்பிலையை கட்டி விடுங்கள். நிறைய பழங்கள், குளிர்ச்சியான பொருட்களை கொடுத்தால் சீக்கிரம் குணமாகி விடும் என்று சொன்னார். இதனால் விஜயும் காவிரி இருக்கும் ரூமிற்கு வெளியே வேப்பிலை கட்டிவிட்டு காவிரிக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்தார். இதை பார்த்து காவேரி சந்தோஷப்பட்டார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் விஜய், காவிரியை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது காவிரியிடம் பேசுவதற்கு கங்கா வந்தார். ஆனால், கதவை திறக்காமல் தான் காவிரி பேசிக் கொண்டிருந்தார். கங்கா- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கங்காவின் மாமியார் கங்காவை திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் காவிரிக்கு அம்மை அதிகமாகி இருப்பதை பார்த்து விஜய் ரொம்பவே பயப்பட்டார். ஆனால், அதை காவிரியிடம் காட்டிக் கொள்ளவில்லை. மறுநாள் காலையில் காவிரியின் அம்மா சாப்பாடு எடுத்துக்கொண்டு காவிரி பார்க்க வந்தார்.
சீரியல் ட்ராக்:
அப்போது காவிரி, அப்பளம் அனுப்புவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்து குமரன், எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொன்னார். அதற்க்கு பின் குமரன், அப்பளத்தை எல்லாம் ரெடி செய்து கொண்டிருக்க, அதை பார்த்த குமரனின் அம்மா, உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை. உன்னை இந்த வீட்டில் வேலைக்காரனாக தான் பார்க்கிறார்கள் என்று வழக்கம்போல காவிரியின் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினார். இதையெல்லாம் கேட்ட காவிரியின் அம்மா எதுவும் பேசாமல் மனம் உடைந்து இருந்தார். பின் கங்காவிடம் அவர், நீயும் குமரனும் இங்கே இருங்கள். நாங்கள் தனியாக சென்று விடுகிறோம் என்று சொன்னார்.
https://www.youtube.com/watch?v=JxC5vu8C9Ec
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜய் வெளியே நின்றிருப்பதை கங்காவின் மாமியார் பார்த்து விடுகிறார். உடனே விஜய் பதறி அடித்துக் கொண்டு காவிரியிடம் நடந்ததை சொல்லி ஒளிந்து கொள்கிறார். பின் கங்காவின் மாமியார் காவிரியின் அம்மாவை அழைத்துக் கொண்டு காவிரி ரூமிற்கு வருகிறார். காவேரி அம்மா ரூம் முழுவதும் தேடுகிறார். ஆனால், விஜய் அங்கு இல்லை. உடனே காவிரி, நீங்கள் பேயை பார்த்து விட்டீர்கள் என்று சொல்லி கங்காவின் மாமியாரை பயமுறுத்துகிறார். மறுநாள் காலையில் விஜய், காவேரியை பார்க்க வந்து விடுகிறார். அப்போது விஜயின் கையில் அம்மை போட்டிருப்பதை காவிரி பார்த்து ஷாக் ஆகிறார்.