காவிரியை பார்க்க வந்த விஜய், உண்மையை போட்டு உடைத்த சாரதா - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி, விஜய்க்கு விடாமல் போன் செய்தார். ஒரு கட்டத்தில் விஜய் திரும்ப போன் செய்தார். ஆனால், காவிரியின் அம்மா போனை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுத்தார். அப்போது காவேரி அம்மா, உனக்கும் விஜய்க்கும் என்ன உறவு? ஏன் அவனை விவாகரத்து செய்ய மாட்டுகிறாய் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு கோபத்தில் காவிரி, நான் மனைவியாக நடிக்கப் போனாலும் மனதார அவருடன் வாழ்ந்தேன். நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் காவேரி குடும்பத்தில் எல்லோருமே ஷாக் ஆனார்கள்.
காவிரி, இந்த விஷயம் எனக்கே லேட்டாக தான் தெரியும். விஜய் எனக்காக தான் இங்கு வந்தார். பின் விஜய்க்கு குழந்தை விஷயம் தெரிந்தது, தாங்கள் வாழ்ந்தது, விஜய் தன்னை பார்த்துக் கொண்டது பற்றியெல்லாம் தன் அம்மாவிடம் சொன்னார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே விஜய்- காவிரியை சேர்த்து வைப்பது பற்றி பேசினார்கள். உடனே குமரனிடம் காவிரி அம்மா, விஜய்யை அழைத்து வர சொன்னார். அதற்குப்பின் காவேரி, விஜய்க்கு போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் வாய்ஸ் மெசேஜில் நடந்ததை எல்லாம் காவிரி சொன்னார்.
மகாநதி:
விஜய்யை நினைத்து அவரின் பாட்டி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிவின்- குமரன் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது நிவின், விஜய் எங்கே இருக்கிறார்? என்றார். கோபத்தில் பாட்டி, அவன் எங்கு இருந்தால் உங்களுக்கு என்ன ப்ரச்சனை? உங்கள் சவுகாசமே தேவையில்லை என்று அவர்கள் இருவரையும் திட்டி அனுப்பி விட்டார். தாத்தா தடுத்துமே பாட்டி கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் காவிரி- கங்கா இருவருமே ரொம்ப எமோஷனலாக குழந்தையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த குமரன், விஜய் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றார். அதற்கு காவிரி, நீ எதையும் யோசி யோசிக்காதே. விஜயால் என்னை பார்க்காமல் இருக்க முடியாது. கண்டிப்பாக வந்து விடுவார் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் காவிரி அனுப்பிய மெசேஜை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் காலையில் காவேரி, விஜய்க்கு போன் மேல் போன் செய்தார். கோபத்தில் விஜய் போன் எடுக்கவில்லை. அதற்கு பின் போன் எடுத்த விஜய், என்ன பிரச்சனை என்றார். அப்போது காவிரி, ஏன் மெசேஜை பார்த்து எனக்கு போன் செய்யவில்லை என்று கேட்டார். விஜய், எதற்காக பண்ணனும் என்று கேட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு விஜய், நான் எவ்வளவோ உனக்காக விட்டுக் கொடுத்து விட்டேன். நான் உன்னை விட்டு ரொம்ப தூரம் சென்று விட்டேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். இதனால் காவேரி ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். உடனே விஜய், காவிரியின் வீட்டிற்கு வந்து விடுகிறார். அதை பார்த்தவுடன் காவிரி ரொம்ப சந்தோசப்படுகிறார். அப்பொழுது காவிரி அம்மா, பணம் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு குழந்தையை கொடுப்பது நியாயமா? நானே என் மகளை தப்பாக நினைத்து விட்டேன் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு விஜய், நாங்கள் இருவரும் மனதார கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்த பிறகு தான் காவிரியின் வயிற்றில் குழந்தை வந்தது. நாங்கள் இருவருமே நேசிக்கிறோம். என்னால் காவிரியை விட்டுக் கொடுக்க முடியாது என்றெல்லாம் பேசினார். இதைக் கேட்டு காவிரி அம்மா சந்தோஷப்படுகிறார். இருந்தாலும் விஜயின் வீட்டில் பேசியதை வைத்து காவேரி அம்மா வருத்தப்படுகிறார். விஜய், என்ன நடந்தது. உண்மையை சொல்லுங்கள் என்கிறார். உடனே காவிரியின் அம்மா, விஜயின் பாட்டி, சித்தி இருவருமே வீட்டிற்கு வந்து விவாகரத்து கேட்ட என அனைத்து விஷயத்தையும் சொல்கிறார். இதைக் கேட்ட விஜய் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.