தன் மகள் அம்முவை தத்தெடுக்க கேட்கும் காவிரி, விஜய் சொன்ன வார்த்தை - பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி வீடு முழுக்க தன்னுடைய அம்மாவை தேடினார். அங்கு இல்லை என்றவுடன் தான் இருக்கும் தெரு, கோயில், கடை என்று எல்லா இடத்திலும் சாரதாவை தேடி அலைதார் காவிரி. எங்குமே சாரதா கிடைக்கவில்லை. பின் தன்னுடைய சகோதரிகளிடம் நடந்ததை சொல்லி காவிரி அழுதார். அதற்குப்பின் விஜய்க்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் காவிரி சொன்னார். உடனே விஜய் வீட்டிற்கு வந்து விட்டார். பின் விஜய், காவிரிக்கு சமாதானம் சொல்லி சாரதாவை தேடி அலைந்தார்கள்.
பஸ் ஸ்டாண்ட், கோவில் என்று பொது இடங்களில் எல்லாம் அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால், சாரதா எங்குமே இல்லை. இதனால் காவேரி ரொம்பவே உடைந்து விட்டார். ஒரு கட்டத்தில் காவிரி, சாரதாவை பார்த்து விட்டார். பின் தன் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். சாரதா, நீதான் என்னை வீட்டை விட்டுப் போக சொன்னாய். நான் கொடைக்கானல் போகிறேன் என்றார். விஜய், சாரதாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
மகாநதி:
சாரதாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அப்போது விஜய் வீட்டிற்கு வெளியே நிற்கிறார். காவேரி, விஜயை வீட்டிற்குள் அழைத்தார். அதற்கு பின் விஜய்- காவேரி இருவரும் சாரதாவிற்கு அட்வைஸ் சொல்லினார்கள். அந்த சமயம் பார்த்து விஜய்க்கு போன் செய்து தாத்தா, அம்முவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சொன்னார். உடனே பதறி அடித்துக் கொண்டு காவிரி, விஜய் இருவரும் இணைக்க போனார்கள். அங்கு காவிரி, அம்முவை ரொம்பவே கவனமாக பார்த்துக் கொண்டார். அது எல்லாம் பார்த்து விஜய்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் அம்முவை, காவிரி கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதனால் அம்முவின் உடல் நிலையும் சரியாக விடுகிறது. அப்போது காவிரி, விஜய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவிரி, எனக்கு அம்முவிடம் ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது. பூர்வீக ஜென்ம பந்தம் போனவே இருக்கிறது. எனக்கு அம்முவை தத்து கொடுக்கிறீர்களா? நீங்கள் வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்கள். நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு விஜய்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
காவிரி மீண்டும் மீண்டும் அம்முவை கேட்டுக் கொண்டிருப்பதால் விஜய் முடியாது என்று சொல்லி விடுகிறார்.
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரி சாரதாவிடம் நடந்தது எல்லாம் சொல்கிறார். சாரதா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் பள்ளியில் மதர்ஸ் டே விழா நடப்பதால் எல்லா மாணவர்களும் தங்களுடைய பெற்றோர்களின் பெயர்களை கொடுத்து இருக்கிறார்கள். இதை பார்த்து பீல் பண்ண காவிரி, தன்னுடைய பெயரை அம்முவின் பெயருக்கு பின்னால் எழுதிக் கொள்கிறார். பின் இதைப் பற்றி தன்னுடைய பிரின்ஸ்பல் இடம் காவிரி பேசுகிறார். அவர்களுமே அம்முவின் அம்மாவாக இருப்பதற்கு காவிரியை ஒத்துக் கொள்கிறார்கள்.