காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் - மகாநதி

By subhashini · 21/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், எதற்காக இப்படி செய்கிறாய்? உன்னுடைய அம்மா வீட்டு பிரச்சனையை மட்டும் பார்க்கிறாய். என்னையும் நினைத்து பாரு என்று எல்லாம் பேசி இருந்தார். அந்த சமயம் கோவிலுக்கு வந்த காவிரியின் அம்மா, விஜய்- காவேரி பேசுவதை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். கடைசியில் விஜய், என் பாட்டி சொன்னது உண்மைதான். நீ ரொம்ப திமிர் பிடித்தவள். நான் உன்னை தேடி வந்து பேசுவதால்தான் என்னை மரியாதை தர மாட்டிக்கிறாய். என் குழந்தைக்கு என்ன ஆனது என்ற பயத்தில் தான் இங்கு வந்தேன் என்று கோபமாக பேசி இருந்தார்.

விஜய், என்னுடைய குழந்தைக்காக மட்டும் தான் நான் உன்னை பார்க்க வருகிறேன். குழந்தையை என்னிடம் பெற்றுக் கொடுத்துவிட்டு நீ உன்னுடைய அம்மாவிற்கு சர்வீஸ் பண்ணு. எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. இனிமேல் நான் உன்னை பார்க்க வரமாட்டேன். நீ பேசும் பேச்சுக்கெல்லாம் யாரும் உன்னை பார்க்க வர மாட்டார்கள் என்று ரொம்ப மோசமாக திட்டி விட்டு சென்றார். காவிரி எதுவுமே பேசாமல் மனம் உடைந்து இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் காவிரி அம்மா, நீ இன்னும் விஜயுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறாயா? உனக்கு வேணுமென்றால் அவனுடன் சேர்ந்து வாழு என்றெல்லாம் இவருடைய பங்கிற்கு திட்டி இருந்தார்.

மகாநதி:

இன்னொரு பக்கம் விஜய், மன அழுத்தமாக இருக்கிறது. நான் தனியாக இருந்து விட்டு வருகிறேன் என்று சென்றார். இதையெல்லாம் கேட்டு அவருடைய பாட்டி ரொம்பவே கஷ்டப்பட்டார். அதற்குப்பின் விஜய்யின் பாட்டி வக்கீலை வரவைத்து விவாகரத்து நோட்டீசை ஏற்பாடு செய்தார். தாத்தா வேணாம் என்று தடுத்துமே பாட்டி கேட்கவில்லை. பின் விவாகரத்து நோட்டீஸ் எடுத்துக்கொண்டு காவிரியின் வீட்டிற்கு போன பாட்டி, விஜய்யும் நீயும் தனியாகத்தான் இருக்கிறீர்கள். சட்டப்படி நீங்கள் இருவருமே பிரிந்து விடுங்கள். அவரவர் வாழ்க்கையை பாருங்கள் என்றார். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியில் காவிரி உறைந்து போனார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் விஜய்யின் பாட்டி, உன்னிடம் விவாகரத்து கேட்டதே விஜய் தான். அவன் 3தான் எங்களை அனுப்பி வைத்தான். உன்னிடம் பேசக்கூட அவனுக்கு விருப்பம் இல்லையாம். நீ எதுவும் பேசாமல் விவாகரத்திற்கு கையெழுத்து போடு. உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று சொல்கிறார். அதற்கு காவிரி, நான் விஜய்யிடம் பேசிவிட்டு முடிவெடுக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு விஜயின் பாட்டி, விஜய் சொன்னதாக கட்டுக்கதைகளை சொல்கிறார். நாளை வருவதற்குள் நல்ல முடிவு எடு என்று பாட்டி செல்கிறார். அதற்குப்பின் காவிரி அம்மா, ஓழுங்கு மரியாதையாக அந்த பையனை விவாகரத்து செய் என்று வழக்கம் போல திட்டிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் நிவின், குமரனை வைத்து காவிரி- விஜய் விவாகரத்தை பற்றி அவருடைய அம்மா பேசுகிறார். காவிரி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்கு பின் காவிரியை அழைத்துக் கொண்டு நிவின், குமரன் இருவரும் தனியாக பேசுகிறார்கள். அப்போது காவிரி, உங்களுக்கு விஜய் சித்தி சொன்ன விஷயம் தான் தெரியும். அதற்கு முன் நான் விஜயுடன் கிளம்ப தயாராக இருக்கும்போது விஜயின் பாட்டி என்னை கோயிலுக்கு அழைத்து, நீ வீட்டிற்கு வரக்கூடாது. விஜயின் வாழ்க்கை விட்டு போ என்றெல்லாம் சொன்னார் என்கிறார்.

https://www.youtube.com/watch?v=qKyo8Zn-Tsc

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் காவிரியின் அம்மா, எதற்காக விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்டு தர மாட்டுகிறாய். உனக்கும் விஜய்க்கும் அப்படி என்ன உறவு? இருக்கிறது. ஒரு அம்மாவாக என்னை கேட்க வைக்காதே என்றெல்லாம் கோபமாக பேசுகிறார். உடனே காவேரி, நான் மனதார விஜய் பொண்டாட்டியாக வாழ்ந்தேன். இப்போ நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்.
இதைக் கேட்டு காவிரி வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full