விஜயை நிரபராதி என்று நிரூபிக்க காவிரி எடுத்த முயற்சி, வெண்ணிலா சொன்ன வார்த்தை - மகாநதி

By subhashini · 29/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் தாத்தா எவ்வளவு சொல்லியுமே விஜயின் சித்தி, அமைதியாகவே நின்றார். அப்போது காவிரி, விஜய்யை கைது செய்த உடனே டிவியில் எல்லாம் வந்துவிட்டது. எல்லாம் தெரிந்து நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா? உண்மையை மட்டும் சொல்லுங்கள். தயவு செய்து விஜயை காப்பாற்றுங்கள் என்று சொன்னார். அதற்கு விஜயின் சித்தி, என் கணவர் உண்மையை சொல்லக்கூடாது என்று மிரட்டினார். என் மகனுமே என் வாழ்க்கையை கெடுத்து விடாதே என்று சொன்னார். நான் என்ன செய்வது? என்னால் எந்த உண்மையையும் சொல்ல முடியாது என்றார். இதனால் தாத்தா கோவப்பட்டார். காவிரி,உங்களுக்கு மனசாட்சி இருந்தால் தயவு செய்து விஜய்யை காப்பாற்றுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இன்னொரு பக்கம் காவிரி- விஜயை நினைத்து ப்ரஸரில் கங்காவிற்கு வயிறு வலி எடுத்து விட்டது. இதனால் அவரை உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்கள். பின் வீட்டிற்கு கங்காவை அழைத்து வந்தார்கள். அப்போது கங்காவின் மாமியார், இங்கிருந்தால் என்னுடைய பேர பிள்ளைக்கு ஏதாவது பிரச்சனையாகும் என்று பயந்தார். உடனே கங்காவின் அம்மா, நாங்களே கிளம்பி வருகிறோம். மாப்பிள்ளையும் கங்காவும் இங்கே இருக்கட்டும். நாங்கள் ஊரிலேயே ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்று முடிவு எடுத்தார். இன்னொரு பக்கம் தாத்தாவிற்கு ஃபோன் செய்த வக்கீல், ரொம்ப நேரம் ஆகிவிட்டது. விஜய் மீது எஃப் ஐ ஆர் பதிவு பண்ணாமல் இருக்க முடியாது என்று சொன்னார். போலீஸ் ஸ்டேஷன் வந்த காவேரி, வெண்ணிலாவிடம் பேசப்போனார்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் நிவின், யமுனாவும் காவிரி வீட்டிற்கு வந்து விட்டார்கள். காவிரி வீட்டிற்கு வராதது நினைத்து மொத்த பேருமே கவலையில் இருந்தார்கள். அப்போது நிவின், காவிரி பார்க்க கிளம்ப, உடனே யமுனா திட்டி இருந்தார். பின் தன்னுடைய அம்மாவிடம் யமுனா, காவிரி - விஜய்யை சேர்த்து வையுங்கள். இல்லை என்றால் காவிரியை ஊருக்கு அழைத்து செல்லுங்கள் என்று திட்டிக் கொண்டிருந்தார்கள். உடனே காவிரியின் அத்தை, இதற்கு சீக்கிரமாக முடிவெடுங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் வெண்ணிலாவிடம் பேசுவதற்காக அவரை தனியாக அழைத்துக் கொண்டு சென்றார் காவிரி.

நேற்று எபிசோட்:

காவிரி, வெண்ணிலாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது காவிரி, விஜய் உன்னை அவ்வளவு காதலித்தார். அவருக்காக தான் உன்னை நான் வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆனால், நீ அவர் மீது பழி போட்டு இருக்கிறாய் என்று கேட்டார். வெண்ணிலா, விஜய் உன் மீது பைத்தியமாக இருக்கிறாரே, விஜய் எனக்கு எப்படியாவது வேண்டும். அதற்காக தான் பசுபதி சொன்னது போல் நான் செய்கிறேன். விஜய் என்னை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டால் நான் உண்மையை சொல்லி விடுவேன் என்று என்றார். இதையெல்லாம் காவிரிக்கு தெரிந்த நபர் ஃபோனில் ரெக்கார்ட் செய்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, நான் உனக்கு விஜய்யை விட்டுத் தருகிறேன் என்றால் நீ எப்படி விஜய் மீது சுமத்தி இருக்கும் பழியை நீக்குவாய் என்று கேட்கிறார். அதற்கு வெண்ணிலா, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்களை விஜயின் சித்தப்பா கொலை செய்ய ஆள் அனுப்பியது உண்மைதான். ஆனால், நாங்கள் சென்ற வண்டி வேகமாக போனதால் தான் விபத்து ஏற்பட்டது. இதற்கும் விஜய்க்கும் சம்மந்தமில்லை. பசுபதி சொன்னது எல்லாம் பொய் என்று சொல்கிறார். இதை எல்லாம் காவிரிக்கு தெரிந்த நபர் போனில் ரெக்கார்ட் செய்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து பசுபதி, ராகினி அங்கு வந்துவிடுகிறார்கள். காவிரியிடம் பேச விடாமல் வெண்ணிலாவை அழைத்து செல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

காவிரி, ஆதாரம் கிடைத்து விட்டதால் ரொம்ப சந்தோஷப்படுகிறார். பசுபதி, காவிரி உன்னிடம் என்ன கேட்டாள்? என்று கேட்க, நடந்ததை எல்லாம் வெண்ணிலா சொல்கிறார். ஆனால், காவிரி போனில் ரெக்கார்ட் செய்த விஷயம் பசுபதிக்கு தெரியவில்லை. பின் வெண்ணிலா, ராகினியை வீட்டிற்கு அனுப்பி வைத்து பசுபதி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அதற்கு பின் காவிரியும் வருகிறார். போலீஸ், விஜய் மீது எஃப் ஐ ஆர் போட பார்க்கிறார்கள். அந்த சமயம் பார்த்து காவேரி உள்ளே வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full