அம்முவை நினைத்து கவலையில் கஷ்டப்படும் காவிரி, சாரதா சொன்ன வார்த்தை - மகாநதி

அம்முவை நினைத்து கவலையில் காவிரி

By subhashini · 11/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ராதாவும் எதுவும் சொல்லாமல் தயங்கி நிற்கிறார். இன்னொரு பக்கம் யாழினி, காவிரியின் புகைப்படத்தை காண்பித்து அம்முவின் அம்மாவும் காவிரி சித்தியும் ஒரே மாதிரி இருந்தார்கள். அது எப்படி? அம்மு காவிரி சித்தியை தான் தன்னுடைய அம்மா என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றெல்லாம் கேட்டார். கங்கா- சாரதா இருவரும் ஷாக் ஆனார்கள். யாழினி இடம் கங்கா ஏதேதோ சொல்லி சமாளித்து அனுப்பி விட்டார். அதற்குப் பின் அம்மு சரியாக பேசாததால் காவேரி சோகமாக இருந்தார். வீட்டுக்கு வந்த காவிரி எதுவும் சொல்லாமல் அம்மு நடந்து கொண்டதையே நினைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அம்மு தன்னிடம் ஒழுங்காக பேசாததை பற்றி காவிரி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னார். சாரதா-கங்கா இருவருமே யாழினி சொன்ன விஷயத்தை தான் நினைத்துப் பார்த்தார்கள். இருந்தாலும் அதை காவிரியிடம் சாரதா சொல்லவில்லை. இன்னொரு பக்கம் அம்மு, எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்று விஜய், தாத்தாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ராதா, அம்மு நீயும் காவிரியும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை காண்பித்து என்னுடைய அம்மா யார்? என்று கேட்டார்.

மகாநதி:

உண்மையை மறைக்க முடியவில்லை. அதனால் நடந்த எல்லாவற்றையும் நான் அம்மிடம் சொல்லிவிட்டேன் என்றார். இதைக் கேட்டு விஜய் அதிர்ச்சி அடைகிறார். எதற்காக இப்படி செய்தீர்கள் என்றார். ராதா, எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்? அம்மு எல்லாவற்றையும் புரிந்து கொள்வாள் என்றெல்லாம் சொன்னார். பின் விஜய், அம்முவை சந்தித்து பேசுகிறார் என்றார். விஜய், அவருக்கு பழைய ஞாபகம் எதுவுமே இல்லை. சீக்கிரத்திலேயே அம்மா நம்முடன் வந்து விடுவார். நீ இதைப் பற்றி உன்னுடைய மிஷ்ஷிடம் சொல்லாதே என்று என்றார். அம்முவும் சரி என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, அம்மு தன்னிடம் சரியாக பேசாமல் இருந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது வந்த கங்கா, சாரதா இருவரும் விசாரிக்கிறார்கள். காவிரி, அங்கு வீட்டில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ? அம்முவின் அப்பாவும் கோவமாக பேசுகிறார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்ப கவலையாக இருக்கிறது என்று சொல்கிறார். சாரதா, அதெல்லாம் ஒன்றும் இல்லை பார்த்துக்கொள்ளலாம் நீ எதையும் யோசிக்காதே என்று சமாதானம் செய்கிறார்கள். மறுநாள் காலையில் சாரதா- கங்கா இருவருமே விஜயின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது யாழினி-அம்மு இருவரும் பேசிக்கொண்ட விஷயத்தை எல்லாம் சாரதா சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

விஜய், அம்முவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன். ஆனால், அவளிடம் அதைப் பற்றி எதுவும் கேட்டுக்காதீர்கள் என்று சொல்கிறார். அதற்குப்பின் சாரதா- கங்கா இருவரும் அம்முவை பார்த்து பேசுகிறார்கள். அம்மு காவிரியை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார். சாரதா, சீக்கிரத்திலேயே நாம் எல்லோரும் சேர்ந்து இருப்போம் கவலைப்படாதே என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்திற்கு அம்முவை தயார் செய்கிறார். இன்னொரு பக்கம் காவேரி, வீட்டில் அம்மாவும் அக்காவும் இல்லாததை பற்றி நர்மதாவிடம் கேட்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full