விஜயை பார்த்த காவிரிக்கு பழைய நியாபகங்கள் வந்ததா? சாரதா சொன்ன வார்த்தை - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், குழந்தைக்கு தங்களுடைய காதல் கதையை சொல்லி தூங்க வைத்தார். மறுநாள் பள்ளிக்கு விஜய், தன் மகளை அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது காவிரியும் வந்தார். விஜய் பார்ப்பதற்குள் காவிரி உள்ளே சென்று விட்டார். பின் விஜய், உன்னுடைய கிளாஸ் டீச்சரை பிறகு சந்திக்கிறேன். பத்திரமாக போயிட்டு வா என்று விஜய் அனுப்பி வைத்தார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்மு, காவிரிக்கு விஷ் செய்து இருவருமே கிளாஸ் ரூமிற்கு போனார்கள்.
சாரதா ஒரு கடையில் காய் வாங்கிக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வந்த விஜயின் சித்தப்பா அன்பரசு, சாரதாவை பார்த்து கடைக்காரர்களிடம் விசாரித்தார். அதற்குப்பின் விஜயின் வீட்டிற்கு வந்த அன்பரசு, சாரதாவை பார்த்த விஷயத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். உடனே சாக்கான தாத்தா, காவிரி குடும்பத்தை பற்றி விஜயிடம் சொல்ல வேண்டாம். இப்போதான் என் பேரனும் என் பேத்தியும் சந்தோஷமாக இருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது காவிரியை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை என்றார்.
மகாநதி:
இன்னொரு பக்கம் பள்ளிக்கூடத்தில் காவிரி, அம்மு இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு சாப்பிட்டார்கள். அப்போது அம்மு, உங்களை பார்த்தால் எங்கள் அப்பா சொல்லும் கதையில் வரும் ராணியை போல நீங்கள் இருக்கிறீர்கள் என்றார். அம்மு சொல்லும் போது காவிரிக்கு தன் வாழ்க்கையில் நடந்தது போலவே தோன்றுகிறது. அதற்குப்பின் விஜய் பள்ளியில் இருந்து தன் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். அம்மு தன்னுடைய டீச்சரை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சந்தோஷமாக சொல்லி கொண்டிருந்தார். எல்லோருக்குமே அம்முவின் டீச்சரை பார்க்க ஆர்வமாக இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் ரோட்டில் காவிரி நடந்து வருவதை விஜயின் சித்தப்பா, சித்தி இருவரும் பார்த்து விடுகிறார்கள். பின் காவிரியை நிறுத்தி விஜயின் சித்தப்பா-சித்தி இருவரும் பேசுகிறார்கள். ஆனால், காவிரிக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. காவிரி பழசை எல்லாம் மறந்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட சித்தி, ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். பின் காவிரி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
அதற்குப்பின் பள்ளிக்கு வந்த காவிரி, குடும்பத்தில் உள்ளவர்களுடைய படத்தை வரைய வேண்டும் என்று சொல்கிறார். அப்போது அம்மு வரைந்த படத்தை பார்த்த காவிரி, அம்மா எங்கே என்று கேட்கிறார்.
விஜய்-காவேரி:
அதற்கு அம்மு, தெரியவில்லை. அம்மா சாமியிடம் போனதாக அப்பா சொன்னார் என்கிறார். பின் எமோஷனல் ஆன காவிரி, அம்மாவின் படத்தை வரைந்து விட்டு சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்கிறார். அம்மு, தன்னுடைய அப்பாவை சந்திக்க சொல்லி கேட்கிறார். காவிரியும் ஒத்துக்கொண்டு இருவரும் நடந்து வருகிறார்கள். அப்போது வேறொரு ஆசிரியர் அழைத்ததால் காவேரி அம்முவை போக சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பின் தன் அப்பாவை பார்த்த அம்மு, இன்னைக்கும் உங்களால் டீச்சரை சந்திக்க முடியவில்லை.
சீரியல் ட்ராக்:
கஷ்டமாக இருக்கிறது என்று சொல்கிறார். விஜய் நாளை சந்திக்கலாம் என்று பேசுகிறார். இப்படி அம்மு- விஜய் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை காவிரி ஓரமாக நின்று பார்க்கிறார். தன் கனவில் வந்தவர் போல விஜய் இருப்பதால் காவேரிக்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. இன்னொரு பக்கம் நிவின்- கங்கா- யமுனா எல்லோரும் கான்ஃபரன்ஸ் காலில் காவிரியை பார்க்க மாப்பிள்ளை வீட்டில் வருவதாக சொல்கிறார்கள்.
சாரதாவிற்கு என்ன சொல்வதே புரியவில்லை? சரி என்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரி தன் கனவில் வந்தவரை நேரில் பார்த்ததாக சொல்கிறார். சாரதா அமைதியாக இருக்கிறார். பின் சாரதா, உன்னை பெண்பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள் என்று சொன்னவுடன் காவேரி ஷாக் ஆகிறார்.