சாரதா சொன்ன விஷயத்தால் அதிர்ச்சியடைந்த காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, விஜய், தாத்தா எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, எனக்கு உங்கள் எல்லோரையும் எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றுகிறது. அது ஏன் தான் தெரியவில்லை என்றார். தாத்தா, அது பூர்விக ஜென்ம பந்தமாக இருக்கும் என்று சமாளித்தார். அதற்குப் பின் காவிரி, விஜய் இருவரும் காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, விஜயின் மனைவியைப் பற்றி கேட்டார். விஜய் தங்களுடைய திருமணத்தை பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
விஜய், தங்களுடைய திருமணம் கதையை எல்லாத்தையும் சொன்னார். உடனே காவிரி, நீங்கள் சொன்னதை எல்லாம் நான் எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறது என்றார். விஜய், சீக்கிரமாகவே உனக்கு பழைய ஞாபகம் வரும் காவேரி என்று மனதுக்குள் சொல்லி சந்தோஷப்பட்டார். பின் காவிரி, உங்களுடைய மனைவி எங்கே இருக்கிறார்? அவருடைய போன் நம்பர் குடுங்க. நான் பேசி உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என்றார். ஆனால், விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
மகாநதி:
பின் காவிரியை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு விஜய் சென்றார். வீட்டிற்கு வந்த காவிரி, விஜயின் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் சொன்னார். சாரதாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் காவிரியும் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகுவதால் தயாரானார். இன்னொரு பக்கம் தாத்தா சோமு, அன்பரசு, சித்தி எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தாத்தா, விஜய்- காவிரி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும். காவிரிக்கு பழைய ஞாபகம் வரவில்லை என்றாலும் நாமே திருமண ஏற்பாடு செய்து இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் தாத்தா, காவிரியின் வீட்டிற்கு செல்லும் விஷயத்தைப் பற்றி விஜய்யிடம் சொல்கிறார். விஜய் ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்கு பின் தாத்தா சோமு, அன்பரசு, சித்தி எல்லோரும் காவிரியின் வீட்டிற்கு போகிறார்கள். அப்போது சோமு, விஜய்- காவேரி இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்கலாம். காவிரியிடம் பேசி சம்மதம் வாங்குங்கள் என்று சொல்கிறார். சாரதா சரி என்கிறார். பின் இதைப் பற்றி சாரதா, கங்கா- யமுனாவிற்கு ஃபோன் செய்து சொல்கிறார். அவர்களுமே
ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
சாரதா, எப்படி காவிரியிடம் சம்மதம் வாங்குவது தெரியவில்லை என்று சொல்கிறார். அதற்கு பின் சாரதா, உனக்கு ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்டில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்கிறார். காவிரி ரொம்பவே சந்தோஷப்பட்டு என்ன காரணம் சொன்னீர்கள் என்கிறார். சாரதா, நெருக்கமான சொந்தத்திலேயே காவிரியை கேட்டிருக்கிறார்கள். அவர்களை தான் திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று சொல்கிறார். காவிரி, நிஜமாகவே அவர்கள் உன்னை பெண் கேட்டு வந்தார்களா? யார் என்று கேட்கிறார். சாரதா, விஜயின் வீட்டில் தான் வந்தார்கள் என்று சொல்கிறார். காவேரி ஷாக் ஆகி நிற்கிறார்.