சிந்துவை அசிங்கப்படுத்திய விஜய் சித்தி, காவிரி செய்த விஷயம் - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 3/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், அந்த வீட்டை ஆறாக பங்கு போட்டு ஐந்து பங்கு காவிரி வீட்டிற்கு, ஒரு பங்கு உங்களுக்கு என்றார். இதனால் கோபப்பட்ட கிருஷ்ணா ஒத்துக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் விஜய் சொன்ன விஷயத்தை எல்லாம் தன்னுடைய அம்மா, தங்கையிடம் கிருஷ்ணா சொன்னார். அவர்களுமே வந்த வரை போதும் கிளம்பி விடலாம் என்றார். ஆனால், கிருஷ்ணா ஒத்துக்கொள்ளவே இல்லை. சரி பாதியாக பங்கு போட வேண்டும் என்றார்.இன்னொரு பக்கம் காவேரி பாட்டு கேட்டு கொண்டிருந்தார்.

விஜய், முத்து மலர் குடும்பம் தங்குவதற்காக ரூமை ஏற்பாடு செய்து தர சொன்னார். இதை கேட்ட விஜயின் சித்தி, நான் சொல்லும் இடத்தை காட்டு என்று வேலைக்காரிடம் சொன்னார். மோசமாக இருக்கும் ரூமில் முத்துமலர் குடும்பத்தை தங்க சொன்னார். இதையெல்லாம் பார்த்து சிந்து பயங்கரமாக அழுதார். கோபத்தில் கிருஷ்ணா, இங்கு எப்படி தங்க முடியும்? என்றார். அதற்கு விஜயின் சித்தி, முத்துமலர் குடும்பத்தை திட்டி அவமானப்படுத்தி விட்டு சென்றார். வேறு வழியில்லாமல் முத்து மலர் குடும்பம் அங்கேயே தங்கி விட்டது.

மகாநதி:

அதற்குப் பின் முத்துமலர், அக்கா என்று கூப்பிட்டு பேசி இருந்தார். கோபத்தில் சாரதா மீண்டும் சண்டை போட்டார். உடனே காவிரி, கங்கா இருவரும் தடுத்து விட்டார்கள். அதற்குப்பின் விஜய் வீட்டிற்கு வந்தார். அப்போது சாரதா, முத்துமலர் குடும்பத்தை: திட்டிக் கொண்டிருந்தார். விஜயுமே ஆறுதல் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து விஜயின் பாட்டி, சித்தி இருவரும் கோபப்பட்டார்கள். சாரதா குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாட்டி,சித்தி எல்லோருமே ஒன்றாக இருப்பதால் காவிரி அவர்களிடம் பேசப் போகிறார். வழக்கம் போல பாட்டி, காவிரியின் உடல்நலத்தை பற்றி விசாரித்து விட்டு
சாரதா, முத்து மலரை பற்றி பேசுகிறார். பின் பாட்டி, சீக்கிரமாக உன் குடும்பத்தை இந்த வீட்டை விட்டு போக சொல்லு. இங்கே இருப்பதே எங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார். காவிரி எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். அந்த சமயம் வந்த விஜய், எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள். காவிரிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று பேசுகிறார். உடனே பாட்டி கோபப்பட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் சிந்து பசி தாங்க முடியாமல் கிச்சனில் இருக்கும் சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிடுகிறார். அப்போது வந்த சித்தி,நாங்கள் சாப்பிட்ட மிச்சம் மீதி தான் நீ சாப்பிட வேண்டும். உனக்கு கிச்சனில் வர அனுமதி இல்லை என்று சிந்துவை மோசமாக திட்டி வெளிய அனுப்பி விடுகிறார். இதனால் மனமடைந்து சிந்து வெளியே அழுது கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்த காவேரி, சிந்துவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அதற்குப்பின் காவிரி-கங்கா, சிந்துவிடம் தன்னுடைய அப்பாவை பற்றியும் திருமணமான கதையை பற்றி எல்லாம் கேட்டு ஷாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full