தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற சபதம் எடுக்கும் சகோதரிகள், வேதனையில் விஜய் - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், நான் இப்பவே கொடைக்கானல் போகிறேன். அந்த பசுபதியை சும்மா விடமாட்டேன் என்று கொந்தளித்தார். உடனே விஜயை தடுத்து நிறுத்தி விட்டார் நிவின். இன்னொரு பக்கம் பசுபதி ஒரு நாள் தங்குவதற்கு வீட்டில் அனுமதி தந்ததால் காவேரியின் அம்மா, பாட்டி எல்லோருமே வேதனையில் அழுது கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் நிவின் இல்லாத சமயம் பார்த்து யமுனா, நீங்கள் எப்படியாவது காவிரியை உங்களுடன் அழைத்து சென்று விடுங்கள். நிவின், காவிரியை இன்னும் மறக்கவில்லை. காவிரியும் நிவினை தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் தான் அவள் உங்களுடன் வர மறுக்கிறார் என்று ரொம்ப மோசமாக பேசினார். இதைக் கேட்டு சிரித்த விஜய், உனக்கு ஏன் இவ்வளவு அசிங்கமான புத்தி இருக்கிறது. நிவினை பற்றியும், என் பொண்டாட்டி பற்றியும் தெரியும். நீ தேவையில்லாமல் அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்து என்று திட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் பசுபதி, காவிரி குடும்பத்திடம் ரவுடிகளை வைத்து பிரச்சனை செய்தார். இதனால் கோபத்தில் காவிரி கத்தியை வைத்து எல்லோரையுமே மிரட்டி வீட்டை விட்டு அனுப்பினார். அந்த சமயம் வந்த போலீஸ், காவிரியை திட்டினார்கள்.
மகாநதி:
பசுபதி, இந்த வீட்டை எழுதி வைக்க சொல்லுங்கள், இல்லையென்றால் என்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க சொல்லுங்கள் என்று சொன்னார். போலீஸ்மே பசுபதிக்கு சாதகமாக தான் பேசி இருந்தார். காவிரியிடம் பணத்தை கொடுப்பதற்காக அவகாசம் கேட்டார்கள். காவிரி, நாங்கள் கடன் வாங்கவில்லை. பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். பின் பசுபதி- காவிரிக்கு இடையே வாக்குவாதம் அதிகமாகவதால் காவிரியின் பாட்டி மயக்கம் போட்டு கீழே விழுதார். பின் உடனடியாக அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்தார்கள். அப்போது டாக்டர், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் தான் மயக்கம் வந்தது. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
கடந்த வாரம் எபிசோட்:
இதனால் கோபப்பட்ட காவிரி, பசுபதியை கொன்று விடலாம் என்று ஹாஸ்பிடலில் இருந்து வேக வேகமாக கிளம்பி வந்தார். உடனே காவிரி அம்மா, தடுத்து நிறுத்தி அவரை சமாதானம் செய்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அங்கு பசுபதி, வீட்டில் இருந்து எல்லா பொருள்களையும் எடுத்து வெளியே போட்டு வைத்திருந்தார். அதோடு . வீட்டு பாத்திரத்த்தையும் பசுபதி திருடி விட்டார்.
இதனால் காவிரி அம்மா ரொம்பவே மனமுடைந்து விட்டார். பின் பசுபதி, டாக்குமெண்ட் தான் இல்லாமல் இருந்தது. இந்த வீடு எனக்கு தான் ஒழுங்கு மரியாதையாக இங்கிருந்து கிளம்புங்கள் என்று மிரட்டி இருந்தார். என்ன செய்வதென்று புரியாமல் காவிரி தவித்து நின்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், நான் கிளம்பி கொடைக்கானலுக்கு வருகிறேன் என்கிறார். அதற்கு காவிரி, நீங்கள் இங்கு வர தேவை இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். பசுபதியால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எந்த பிரச்சினையும் வேண்டாம். நான் உங்களை விட்டு விலகுகிறேன் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதைக் கேட்டு விஜய் ரொம்பவே கஷ்டப்படுகிறார். அதற்குப்பின் விஜய், தன்னுடைய தாத்தாவிடம் காவிரி பேசியதை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட விஜய் பாட்டி, அவள் ரொம்ப திமிர் பிடித்தவள். உனக்கு மரியாதை கொடுக்க மாட்டுகிறாள். உன்னுடைய வாழ்க்கையை பார் என்றெல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதைக் கேட்ட விஜய்க்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் காவிரி குடும்பத்தினர் எல்லோருமே சென்னைக்கு வந்து விடுகிறார்கள். அப்போது வந்த நிவின், பசுபதிக்கு உங்கள் வீட்டை வாங்குவது நோக்கம் கிடையாது. காவிரியையும் உங்களையும் நிம்மதி இல்லாமல் அலைய வைப்பது தான் அவருடைய ஒரே லட்சியம் என்று சொல்கிறார். உடனே காவிரி, எப்படி வீட்டை வாங்கணும் என்று எனக்கு தெரியும். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று தன்னுடைய அம்மாவுக்கு ஆறுதல் சொல்கிறார். உடனே காவிரி அம்மா, உங்கள் அப்பா ஒவ்வொருவரின் மீதும் கனவு வைத்து இருந்தார். உங்கள் அப்பாவின் கனவை நோக்கி போராடுங்கள் என்று சத்தியம் கேட்கிறார். பின் தன் அம்மா சொன்ன வார்த்தைக்காக நான்கு சகோதரிகளும் சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.