சாரதாவை வீட்டை விட்டு வெளியே போக செல்லும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி

By subhashini · 19/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி வேறொரு பையனை பார்க்க செல்லும் விஷயத்தை பற்றி விஜய், தாத்தாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அதற்கு தாத்தா சோமு, ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் காவேரி சூப்பராக தயாராகி சென்றார். சாரதா, எங்கே என்று கேட்டார். காவிரி, ஒரு பையனை சந்திக்க செல்லும் விஷயத்தை சொன்னார். அதற்குப்பின் விஜய்யும், காவிரி சொன்னதால் ஒரு பெண்ணை பார்ப்பதற்காக காபி ஷாப் போனார்.

அங்கு விஜய் அந்த பெண்ணுடன் பேசாமல் காவேரி எங்கு சென்று இருப்பார்? யாரை பார்த்து பேசி இருப்பார்? என்று நினைத்துக் கொண்டிருந்தார். அந்த பெண் சொல்வதை காது கொடுத்து கூட விஜய் கேட்கவில்லை. பின் தொடர்ந்து விஜய், காவிரிக்கு போன் செய்தார். ஒரு கட்டத்தில் காவிரி, விஜயின் போனை எடுத்து திட்டி வைத்து விட்டார். காவிரி ரொம்ப ஜாலியாக தன்னை பார்க்க வந்த நபருடன் பேசிக் கொண்டிருந்தார். பின் விஜய் கோயில், காபி ஷாப் என்று காவிரியை தேடி சென்றார். ஒரு கட்டத்தில் காவிரி ஒரு கடையில் டீ குடித்து இருப்பதை பார்த்து விட்டார் விஜய்.

மகாநதி:

காவிரியை சந்தித்த விஜய், எல்லாம் பேசி முடிந்து முடித்து விட்டீர்களா? என்றார். காவிரி, கார்த்தியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவருக்கும் என்னை பிடிக்கும் என்று நம்புகிறேன். சீக்கிரத்தில் எங்கள் இருவருக்கும் செட்டாகிவிடும் என்றார். இதை கேட்டு விஜய்க்கு பயங்கர கடுப்பாகிறது. பின் காவிரி, விஜயை பார்க்க வந்த பெண்ணை பற்றி விசாரித்தார். விஜய், அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னார். அதற்குப்பின் காவிரி அந்த பெண்ணிடம் விஜய் பற்றி பேச போனார்.

சீரியல் ட்ராக்:

விஜயுமே கார்த்தியிடம் பேசி இருந்தார். அப்போது விஜய், காவேரி என்னுடைய முறை மாமன் மகள். ஆனால், அவள் ரொம்ப திமிர் பிடித்தவள். அவளை போய் எப்படி ஓகே சொன்னீர்கள் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். அது மட்டும் இல்லாமல் சாரதாவிற்கு போன் செய்து காவிரியைப் பற்றி பேச சொன்னார் விஜய். சாரதா, காவிரியை பற்றி மோசமாக சொன்னார். இதனால் கார்த்திக்கு பயமாக இருக்கிறது. காவிரியை திருமணம் செய்ய வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்து விட்டார். விஜய் வந்த வேலை முடிந்தது என்று அங்கிருந்து சென்றார்.

https://www.youtube.com/watch?v=WWZzyZ9LDyQ

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் காவிரிக்கு போன் செய்த கார்த்திக், உங்களை நான் வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் உங்கள் கசின் விஜய் தான். அவர்தான் உங்களை பற்றி தப்பாக பேசி இருந்தார். அதோடு உங்கள் அம்மாவுமே விஜயுடன் சேர்ந்து உங்களைப் பற்றி மோசமாக பேசினார் என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்ட காவிரி, தன்னுடைய அம்மாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். அது மட்டும் இல்லாமல் சாரதாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அதற்குப் பின் வீட்டில் தன்னுடைய அம்மா இல்லை என்று தெரிந்தவுடன் காவேரி அழுது கொண்டு விஜய்க்கு ஃபோன் செய்து பேசுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full