விஜய்யின் குடும்பத்தை சராமரியாக வெளுத்து வாங்கும் விஜய், நடந்தது என்ன? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், தங்களுடைய திருமணம் கதையை எல்லாத்தையும் சொன்னார். உடனே காவிரி, நீங்கள் சொன்னதை எல்லாம் நான் எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறது என்றார். விஜய், சீக்கிரமாகவே உனக்கு பழைய ஞாபகம் வரும் காவேரி என்று மனதுக்குள் சொல்லி சந்தோஷப்பட்டார். பின் காவிரி, உங்களுடைய மனைவி எங்கே இருக்கிறார்? அவருடைய போன் நம்பர் குடுங்க. நான் பேசி உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என்றார். ஆனால், விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
பின் காவிரியை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு விஜய் சென்றார். வீட்டிற்கு வந்த காவிரி, விஜயின் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் சொன்னார். சாரதாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் காவிரியும் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகுவதால் தயாரானார். இன்னொரு பக்கம் தாத்தா சோமு, அன்பரசு, சித்தி எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தாத்தா, விஜய்- காவிரி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும். காவிரிக்கு பழைய ஞாபகம் வரவில்லை என்றாலும் நாமே திருமண ஏற்பாடு செய்து இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்றார்.
மகாநதி:
தாத்தா, காவிரியின் வீட்டிற்கு செல்லும் விஷயத்தைப் பற்றி விஜய்யிடம் சொன்னார். விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்கு பின் தாத்தா சோமு, அன்பரசு, சித்தி எல்லோரும் காவிரியின் வீட்டிற்கு போனார்கள். அப்போது சோமு, விஜய்- காவேரி இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்கலாம். காவிரியிடம் பேசி சம்மதம் வாங்குங்கள் என்றார். சாரதா சரி என்கிறார். பின் இதைப் பற்றி சாரதா, கங்கா- யமுனாவிற்கு ஃபோன் செய்து சொன்னார். அவர்களுமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
சாரதா, எப்படி காவிரியிடம் சம்மதம் வாங்குவது தெரியவில்லை என்றார். அதற்கு பின் சாரதா, உனக்கு ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்டில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றார். காவிரி ரொம்பவே சந்தோஷப்பட்டு என்ன காரணம் சொன்னீர்கள் என்றார். சாரதா, நெருக்கமான சொந்தத்திலேயே காவிரியை கேட்டிருக்கிறார்கள். அவர்களை தான் திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்றார். காவிரி, நிஜமாகவே அவர்கள் உன்னை பெண் கேட்டு வந்தார்களா? யார் என்றார். சாரதா, விஜயின் வீட்டில் தான் வந்தார்கள் என்று சொல்கிறார். காவேரி ஷாக் ஆகி நிற்கிறார்.
https://www.youtube.com/watch?v=BwVsXKQNeco
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சாரதாவிடம் காவேரி, இதற்கு இன்னைக்கே முடிவு கட்டுகிறேன் என்று விஜய் வீட்டிற்கு வருகிறார். அப்போது காவிரி, யாரைக் கேட்டு நீங்கள் என் வீட்டிற்கு பெண் கேட்க வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தம். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று விஜயின் தாத்தா, சித்தி எல்லோரையும் திட்டுகிறார். பின் விஜய், மன்னிப்பு கேட்டு எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார். இருந்தாலும் காவிரி கேட்கவில்லை.